திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 19 ஜூலை 2023 (08:27 IST)

குடற்புழுக்களை நீக்கும் அற்புதமான உணவுகள்!

Herbal powders
வயிற்றில் குடல் பகுதியில் உருவாகும் புழுக்கள் உடல் நலனுக்கு கேடு விளைவிப்பவை. ஆனால் இவற்றை ஆரோக்கியமான இயற்கை உணவுகளை கொண்டு நீக்க முடியும். அதுகுறித்து தெரிந்து கொள்வோம்.


  • கற்பூரவள்ளி எண்ணெயை எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்து வர குடற்புழு நீங்கும்.
  • கிராம்பு இரண்டை தினசரி மென்று தின்று வர குடற்புழுக்களை அழிக்கும்.
  • தினமும் காலை வெறும் வயிற்றில் பச்சை கேரட்டை கடித்து சாப்பிட்டு வர குடற்புழு நீங்கும்.
  • ஒரு கப் புதினா சாற்றுடன், எலுமிச்சை சாறு கறுப்பு உப்பு கலந்து சாப்பிட்டு வர குடற்புழு பிரச்சினை நீங்கும்.
  • வெதுவெதுப்பான பாலுடன் ஆமணக்கு எண்ணெய் 2 ஸ்பூன் கலந்து குடித்தால் குடற்புழுக்கள் மலத்தில் வெளியேறிவிடும்.
  • தினசரி ஒரு பல் பூண்டை மென்று சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் குடற்புழுக்கள் அழியும்.
  • எலுமிச்சை விதைகளை பொடியாக்கி நீருடன் கலந்து பருக குடற்புழு நீங்கும்.
  • குறிப்பு: ஆரோக்கிய தகவலுக்காக வழங்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.