1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 25 மே 2022 (10:02 IST)

தினமும் விளாம்பழத்தை சாப்பிடுவதினால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் !!

Vilam Pazham
அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. பனங்கற்கண்டுடன் விளாம்பழத்தை சாப்பிட, பித்தக் கோளாறுகளால் உண்டாகும் வாந்தி, தலைச் சுற்றல் தீரும்.


சிறிது சர்க்கரையுடன் விளாம்பழத்தைப் கலந்து சாப்பிட்டால் உடலின் ஜீரண சக்தி அதிகரிக்கும். விளாம்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும்.

பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும்.

விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக்கும்.

தினமும் குழந்தைகளுக்கு விளாம்பழத்தைக் கொடுத்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். விளாம் மரத்தின் இலையை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்துக் குடித்தால் வாயுத் தொல்லை நீங்கும்.