புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும் நெல்லிக்காய் !!

நெல்லிக்காய் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது. இன்சுலின் சுரக்கும் செல்களை ஒழுங்குபடுத்துகிறது. வளர்ச்சிதை மாற்றம் சரி செய்யவும், எல்டிஎல் கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது.

நெல்லிக்காயில் உள்ள குரோமியம் இருதய துடிப்பை ஒழுங்குபடுத்தவும், இருதய குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கவும் பயன்படுகிறது. நெல்லியில் அதிகமான நார்சத்து உள்ளதால் குடல் இயக்கத்தினை ஒழுங்குபடுத்தி மலச்சிக்கலை தீர்க்கிறது. குடல்களில் இருக்கும் இரணங்களை சீர்செய்கிறது உடலில் இருக்கும்  அதிகமான கழிவு, நஞ்சுகளை வெளியேற்றி ஆக செயல்படுகிறது
 
தலைமுடியின் வேர் நன்கு வளர்வதற்கும், முடியின் வேர்களை தூண்டுவதற்கும் முடி கருமை நிறமாக மாறுவதற்க்கும், தலை வலுக்கை விழாமல் தடுப்பதற்கும், இதில் இருக்கும் கரோட்டின் மற்றும் ஆன்டாக்சிடென்ஸ் உதவுகிறது
 
விட்டமின் ஏ அதிகமாக இருப்பதால் மாலைக்கண் நோய் வராமல் தடுக்கிறது மற்றும் கண் புரை வராமல் தடுக்கவும், கண்ணுக்குள் இருக்கும் அழுத்தத்தை குறைக்கவும் கரோட்டின் உதவுகிறது.
 
கல்லீரலில் இருக்கும் சுரப்பிகளை ஒழுங்குபடுத்தி கல்லீரலை பலப்படுத்துகிறது, மேலும் கல்லீரலில் தங்கும் இருக்கும் நச்சுப்பொருட்களை, டாக்சின்களையும், வெளியேற்ற உதவுகிறது.
 
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலியை தடுக்கிறது. மேலும் இதில் வைட்டமின் C போன்ற சத்துக்கள் இருப்பதால் தோல் சுருக்கங்கள், முகத்தில் ஏற்படும் கொப்பளங்கள், புள்ளிகள், வளர்ச்சிதை மாற்றங்களை சரிசெய்து வயோதிகத்தை தள்ளிப்போடுகிறது.