வியாழன், 2 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்பை வெளியேற்ற உதவும் உணவுகள்..!!

தினமும் ஆப்பிள் உட்கொள்ளுதல் மருத்துவரை அணுகுவதை குறைக்கும். அதே வேளையில், கொழுப்புச் செல்களை குறைக்கவும் உதவுகிறது. இதில் காணப்படும்  பெக்டின் என்ற பொருள், உடற்செல்கள் கொழுப்பினை உறிஞ்சுவதை மட்டுப்படுத்துவதோடு, நீர்த்தன்மையினால் கொழுப்பு சேர்க்கைகளை நீக்க உதவுகிறது.
 

வால்நட்: வால்நட்களில் ஒமேகா-3, ஆல்பா லினோலினிக் மற்றும் தன்னிறைவற்ற கொழுப்புச் சத்தை ஆரோக்கியமான அளவுகளில் கொண்டுள்ளது. இந்த தன்னிறைவற்ற கொழுப்புச்சத்தானது, பெரிய அளவில் நம் கொழுப்பை கரைக்க உதவுவதோடு, உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது.
 
பீன்ஸ் ஒரு குறைந்த கொழுப்பையும், க்ளைசீமிக் குறியீடு எனப்படும் மெதுவாக சக்தி வெளியிடும் தன்மையும், அதிக அளவு நார்ச்சத்து மற்றும் புரதச் சத்தையும் கொண்ட உணவு. இது சைவ உணவு உண்பவர்களுக்கு ஒரு சிறந்த புரதச்சத்து தரும் உணவு. அத்துடன் இது கொழுப்பை வெளியேற்றி, உடலுக்கு நல்ல வளர்சிதை சுழலை வழங்குவதால், இது நல்ல முறையில் கொழுப்பை கரைக்கும் உணவாக விளங்குகிறது.
 
இஞ்சியில் பல ஆச்சரியப்படத்தக்க குணங்கள் உள்ளன. இது அஜீரணத்தை குறைக்கவும், வயிற்று எரிச்சலை குறைக்கவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் மற்றும் தசை மீட்புக்கும் உதவுகிறது. மேலும் இது சக்தியையும், கொழுப்பை கரைக்கும்.
 
காலை உடற்பயிற்சிக்குப் பின்னர் அல்லது காலை நடைப்பயிற்சிக்குப் பின்னர் ஓட்ஸ் உணவு சேர்த்துக் கொள்ளுங்கள். ஓட்ஸ் உணவு மெதுவாக செரிமானமாவதால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் இன்சுலின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும், அதே சமயம் கொழுப்பைக் கரைய வைத்து விரைவுப்  படுத்தவும் உதவுகிறது.
 
க்ரீன் டீ எனப்படும் பச்சை தேயிலையில் உள்ள பல்வேறு குணங்கள், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, புற்றுநோய் செல்களையும் அழிக்கும் தன்மை கொண்டவை.
 
மிளகை உபயோகிப்பதனால் உணவு உண்ட பின்னும்கூட சக்தி மற்றும் கொழுப்பு உடனடியாக வெளியேற்றப்பட்டு, உடலின் வளர்ச்சிதை மாற்றம் குறைந்த நேரத்திற்குள் விரைவுப் படுத்தப்படுகிறது. மேலும் இதில் உள்ள காப்சைசின் என்ற மூலப் பொருள், உடலின் அழுத்த அமிலங்களை விடுவித்து உடம்பிற்கு ஒரு தற்காலிக ஊக்கத்தை தருகிறது. இந்த முறையினால் உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்கப்படுத்தி, சக்தியையும், கொழுப்பையும் கரைக்க உதவுகிறது.