1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 25 மார்ச் 2022 (09:49 IST)

நரம்பு தளர்ச்சி பிரச்சனை குணமாக உதவும் உணவுகள் !!

அத்திப்பழம் நரம்பு தளர்ச்சி பிரச்சனையை குணப்படுத்தி, நரம்புகளை நன்கு வலுப்படுத்தும். உடல் பலவீனத்தை சரிசெய்து, உடல் பலத்தை அதிகரிக்கும் சக்தி அத்திப்பழத்திற்கு உண்டு.


உடல் நரம்புகளை நன்கு வலுப்படுத்தும் சக்தி பிரண்டைக்கு உண்டு. பிரண்டையை உணவில் அதிகம் சேர்த்து கொள்வதினால் நரம்பு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும்.

நரம்பு தளர்ச்சி பிரச்சனை உள்ளவர்கள் மாதுளை பழத்தை அதிகம் சாப்பிடுவதால் உடல் சூட்டை தனித்து, உடலை வலுப்படுத்தும், நரம்பு தளர்ச்சியை சரிசெய்யும்.

நெல்லிக்காயில் உடலை வலுப்படுத்தும் அனைத்து சக்திகளும் உள்ளது. நெல்லிக்கனியை தினமும் சாப்பிடுவதினால் நரம்பு தளர்ச்சி பிரச்சனை குணமாகும். மேலும் நோய்களும் ஏற்படாது.

வெற்றிலைகளை வாயில் போட்டு மென்று சாப்பிட நன்கு பசியெடுக்கும். செரிமான பிரச்சனைகளும் ஏற்படாது. உடல் நரம்புகளை நன்கு வலுப்படுத்தும் சக்தி வெற்றிலைக்கு உண்டு.

முருங்கை கீரை உடல் நரம்புகளை நன்கு வலுப்படுத்தும். முருங்கை கீரையை சமைக்கும்போது அதனுடன் சிறிதளவு முருங்கை பூவை சேர்த்து சமைத்து சாப்பிடலாம். இதனால் நரம்புகள் வலுப்படும்.

பேரிச்சை பழத்துடன் பால் கலந்து தினமும் சாப்பிட்டு வர உடல் வலுப்பெறும். நரம்புகள் மற்றும் எலும்புகள் வலுப்பெறும். தேறாத உடல் கூட பேரிச்சையுடன் பால் கலந்து சாப்பிட்டு வர தேறும். பலவீனமான உடல் கூட பலம் பெறும்.