1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும் உணவு வகைகள்...!

கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம்.
தாமரைப்பூவை நீர் விட்டு காய்ச்சி தினசரி மூன்று வேளையும் ஒரு டம்ளர் அளவுக்கு குடித்து வந்தால் மூளையின் செயல்பாடு மேம்படும். இதை 48 நாள்களுக்குக் குடித்து வரலாம்.
 
குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால், மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வைத் தரும்.
 
வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி சுடுசாதத்துடன் இரண்டு கவளம் சாப்பிட்டு வர வேண்டும். தினசரி இரண்டு துண்டு தேங்காயை மென்று தின்பதால் மூளையில் எந்தப் புண்களும் வராது.
 
இலந்தைப் பழத்துடன் கருப்பட்டிச் சேர்த்து அரைத்துக் குடித்தால் பதற்றத்தைக் குறைக்க முடியும். மூளையின் நரம்புகள் வலுப்பெறும்.
 
பெருவிரலும் ஆள்காட்டி விரலும் இணைத்து வைத்திருக்கும் சின் முத்திரையை, தினமும் 20 நிமிடங்கள் செய்தால் மூளையின் செல்கள் புத்துயிர் பெறும்.  நினைவுத்திறன் மேம்படும்.
 
மூளையை உற்சாகமாக வைத்துக்கொள்ள தியானமும், யோகாவும் உதவும். சில உடற்பயிற்சிகள் செய்வதன்மூலம் மூளையைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள  முடியும்.