ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

செரிமான பிரச்சனையை எளிதில் தீர்க்கும் ஆளி விதை...!!

ஆளி விதையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை கொண்டது இது. நமது உடல் செயல்பாடுகளுக்கு அவசியமான இந்தக் கொழுப்பு  அமிலங்களை, நமது உடலால் சுயமாக உற்பத்தி செய்ய முடியாது.
செல் செயல்பாடுகளை ஆரோக்கிய மாக வைத்திருக்கிறது. மூளை வளர்ச்சிக்கு உதவியாக இருப்பதுடன், இதயத்துக்குப் பாதுகாப்பையும் ஆளி  விதை உறுதிப்படுத்துகிறது.
 
ஆளி விதைகளில் நார்ச்சத்துக்கள் நிரம்புயுள்ளதால் இது உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கட்டாயம் எடுத்து கொள்ளவேண்டும்.  இதனை சரியான அளவில் எடுத்து கொண்டால் பசியெடுக்காது.
 
ஆளி விதையின் லிக்னான்ஸ்களை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு மேம்படுகிறது.
 
ஆளி விதையில் லிக்னன் என்ர தாவர வேதிப்பொருள் இருப்பதால் பெண்களில் ஹார்மோன் சமநிலயைப் பாதுகாத்து மாதவிடாய் சிழற்சியை  இயல்பாக வைக்கிறது. ஒழுங்கற்ற மாதவிடாய்க் கோளாறுகளை சரி செய்யும்.
 
ஆளி விதைகளில் ஏராளமான நார்ச்சத்துகள் நிரம்பியுள்ளது. இதனால் செரிமான பிரச்சனையை எளிதில் தீர்க்கும். ஆளி விதை முக்கியமாக  மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.