Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வேர்க்கடலையில் உள்ள கொழுப்பு சத்தால் ரத்த அழுத்தம் அதிகரிக்குமா குறையுமா?

Widgets Magazine

வேர்க்கடலை, கடலை எண்ணெய் என்றதுமே முதலில் எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச்  சத்துதான். வேர்க்கடலை, கடலை எண்ணெயைப் பயன்படுத்தினால் இரத்த அழுத்த நோய் வரும், இதய நோய்கள் வரும் என்ற  பயம் பரவலாக உள்ளது. ஆனால் இந்தப் பயத்திற்கு எந்தவித ஆதாரமுமில்லை.

 
வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து இருக்கிறது. ஆனால் அது நல்ல கொழுப்பு. உடம்புக்குத் தேவையான கொழுப்பு.  வேர்க்கடலையை ஏழைகளின் புரதம் என்று கூடச் சொல்லலாம். அந்த அளவுக்குப் புரதச் சத்து அதிகமாக உள்ளது. அது  மட்டுமல்ல, 30 விதமான ஊட்டச் சத்துகள் வேர்க்கடலையில் உள்ளன. சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு வேர்க்கடலை நல்ல உணவு.
 
வேர்க்கடலையில் உள்ள மருத்துவ குணங்கள்
 
ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் தன்மை சோடியத்துக்கு உள்ளது. வேர்க்கடலையில் சோடியத்தின் அளவு குறைவு. எனவே வேர்க்கடலை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்காது. குறையும்.
 
வேர்க்கடலையில் நார்ச்சத்து அதிகம். வேர்க்கடலை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது. உடல் பருமன் குறையும். வேர்க்கடலையில் வைட்டமின் ஏ, நீரில் கரையக் கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகமாக உள்ளன. இந்த வைட்டமின்கள்  கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமானது. இந்தச் சத்துப் பொருட்கள் குறைந்தால் பிறக்கும் குழந்தை நரம்புக் கோளாறுகளுடன்  பிறக்க வாய்ப்புள்ளது. எனவே கர்ப்பிணிகள் வேர்க்கடலையை அதிகம் சாப்பிட வேண்டும்.
 
வேர்க்கடலையில் சில உயிர் வேதிப் பொருட்கள் உள்ளன. அவை மனித உடலில் புற்றுநோய் உருவாகக் காரணமாக உள்ள செல்களை அழித்துவிடுகின்றன. குறிப்பாக மார்பகப் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய், நிணநீர்ப்பை புற்றுநோய் போன்றவை உருவாகக் காரணமாகும் செல்களை வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருட்கள் அழித்துவிடுகின்றன.
 
வேர்க்கடலையில் நைட்ரிக் அமிலம் உள்ளது. வேர்க்கடலையைச் சாப்பிடுவதன்மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது. இதனால் ரத்தம் சீராக ஓடும். ரத்த அழுத்தம் குறையும்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்



Widgets Magazine
Widgets Magazine
news

வேரிகோஸ் வெயின்ஸ் என்றால் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் தீர்வுகள்

நல்ல ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் நேரத்தில் திடீரென கால்களில் கரன்ட் வைத்த மாதிரி ...

news

நுரையீரல் சுத்தமாக அடிக்கடி வெங்காயச் சாற்றை சாப்பிட்டு வர கிடைக்கும் பயன்கள்

வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள ...

news

உடலில் வறட்சி நீங்கி அழகாக்கும் ஆவாரம் பூ

ஆவாரம் பூவை உணவில் அடிக்கடி சேர்த்து வர மேனி எழில் பெறுவதுடன் உடல் ஆரோக்கியமும் ...

news

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் எதை சாப்பிடலாம் எதை சாப்பிடக் கூடாது?

சாப்பிடக் கூடாத உணவுகள்: காய்கறிகளில் பீட்ரூட், திராட்சை, சர்க்கரை, ஜாம், பிஸ்கட், ...

Widgets Magazine Widgets Magazine