செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தயிர் சாப்பிடுவதால் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு குறையுமா...?

தயிர் சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சிறந்த உணவாகும். இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி இதய நோய் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கின்றது.  தினமும் தயிர் எடுத்துக் கொள்ளும் போது உடல் எடையை குறைக்க உதவி செய்கிறது. இதன் மூலம் டைப் 2  வகை சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்.
தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான். தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது. கால்சியமும், ரிபோ ப்ளேவின் என்ற வைட்டமின் ‘பி’ யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது.
 
பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர்  ரயித்தா சாப்பிடுகிறோம்.
 
மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர்  வழங்குகிறது.
 
தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது. கால்சியமும், ரிபோ ப்ளேவின் என்ற வைட்டமின் `பி’ யும்  தயிரிலிருந்தே பெறப்படுகிறது.
 
தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். பாலை உட்கொண்ட ஒரு மணிநேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. 
 
தயிருக்கு சில மருத்துவ குணங்களும் உண்டு. சுவையிழந்த நாக்கிற்கு சுவை ஊட்டும். குளிருடன் கூடிய முறைக் காய்ச்சல், நீர்ச் சுருக்கு  போன்ற நோய்களுக்கு தயிர் பயன்படும். தயிருக்கு இது போன்ற சில குணங்கள் இருந்தபோதிலும் அதைப் பயன் படுத்தும்போது நிறைய  விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.