வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

எளிதாக கிடைக்க கூடிய வெற்றிலையின் இயற்கை மருத்துவ குறிப்புகள்...!

வெற்றிலை, உமிழ்நீரை பெருக்கும், பசியை உண்டாக்கும், பால் சுரக்க வைக்கும், நாடி நரம்புகளை உரமாக்குவதுடன், காமத்தையும் தூண்டும். இது, இயற்கை தந்த அற்புதம். ஆகவே அளவோடு வெற்றிலை சாப்பிட்டுவந்தால், ஆண்மை குறைபாடு நீங்கும். வாய் துர்நாற்றத்தை போக்கும்.
வெற்றிலை சாற்றுடன் தேவையான அளவு நீர் மற்றும் பால் கலந்து பருகிவந்தால், சிறுநீர் நன்றாக பிரியும்.
 
வெற்றிலையை தீயில் வாட்டி, அதனுள் ஐந்து துளசி இலைகளை வைத்து, கசக்கி பிழிந்து சாறு எடுத்து, 10 மாத குழந்தைக்கு காலையும் மாலையும்  10  சொட்டு வீதம் கொடுத்து வந்தால் சளி, இருமல் குணமாகும். வெறும் இலையை தீயில் வாட்டி, மார்பில் பற்றுப் போட்டுவந்தால் சளி குறையும்.
 
விதைப்பையில் ஏற்படும் வலி, வீக்கம் மற்றும் கீல்வாத கோளாறுகளுக்கு இதன் இலையை அரைத்து கட்டிவந்தால் கைமேல் பலன் கிடைக்கும்.
 
இலையில் ஆமணக்கு எண்ணெய் தடவி வாட்டி, கட்டிகளின் மேல் வைத்து கட்டினால் கட்டிகள் உடைந்து சீழ் வெளியாகும். இதை இரவில் கட்டுவது  நல்லது.
 
கொழுந்து வெற்றிலையுடன் (ஒன்று) ஐந்து மிளகு சேர்த்து வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும். இதை தினமும் காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து 8 வாரம் சாப்பிட்டு வந்தால், இரைப்பை குடல் வலி, அசிடிட்டி, செரிமானம், மலச்சிக்கல் போன்றவை குணமாவதோடு மெட்டபாலிசம் அதிகரித்து, உடலில் உள்ள  நச்சுகள் வெளியேறி உடல் சுத்தமாகும்.
மலச்சிக்கல் பிரச்னை தீர இதன் சாறு பலன் தரும். 30 மி.லி சாற்றை வெறும் வயிற்றில் குடிக்கலாம் அல்லது வெற்றிலையை இடித்து இரவு முழுவதும் நீரில்  ஊறவைத்து, அந்த நீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்னை தீரும்.
 
தேள் கடிப்பதால் ஏற்படக்கூடிய விஷத்தை முறிக்க இரண்டு இலையுடன் ஒன்பது மிளகு சேர்த்து நன்றாக மென்று விழுங்க வேண்டும். அத்துடன் தேங்காய்த்  துண்டுகள் சிலவற்றையும் மென்று சாப்பிட்டால், கைமேல் பலன் கிடைக்கும். தேள் கடி மட்டுமல்ல, விஷப்பூச்சிகள் எதுவும் கடித்தால் இதேபோல செய்து, நோய் பாதிப்பிலிருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.