செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

எளிதில் கிடைக்கக் கூடிய நோய்களை குணமாக்கும் கறிவேப்பிலை...!

கறிவேப்பிலைக்கென்று தனித்துவமான மணமும் சுவையும் உள்ளது. இதன் சுவை சற்றுக் காரத்துடன் கலந்த கசப்புத் தன்மையைக்  கொண்டிருக்கும்.
பெரும்பாலானோர் உணவு பதார்த்தங்களில் போடப்படும் ஒரு கறிச்சுவையூட்டியாக அல்லது வாசனைப் பொருளாக மட்டுமே  கருவேப்பிலையை கருதுகின்றனர். ஆனால் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.
 
வெறும் வயிற்றில் தினமும் கறிவேப்பிலையை மென்று சாப்பிட வேண்டும். தொடர்ந்து மூன்று மாதம் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயால் உடல் பருமனாவது தவிர்க்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறும் அளவும் குறைந்துவிடும்.
 
கறிவேப்பிலையில் போதுமான அளவு இரும்புச் சத்தினையும் போலிக் அமிலத்தினையும் கொண்டுள்ளது. எலும்புகளை வலுவடையச் செய்வதில் போலிக் அமிலம் முக்கிய பங்கினை ஆற்றுகின்றது. ஒரு நாளைக்கு இரண்டு கறிவேப்பிலைகள் வீதம் தொடர்ந்து சாப்பிட்டு  வருவது இரத்த சோகைக்கான சிறந்த சிகிச்சை முறையாகும்.
இளம் வயதில் நரையை தடுக்க கறிவேப்பிலை உதவும். அதுமட்டுமல்ல நரை முடி வந்தவர்களும் உணவிலும் தனியாகவும் கறிவேப்பிலையை அதிகமாக சேர்த்துக் கொண்டால் நரை முடி நீங்கப் பெறுவர்.
 
கறிவேப்பிலையின் இலை, வேர், பட்டை, தண்டு மற்றும் பூக்களைத் தண்ணீரில் கொதிக்க வைத்துப் பருகினால் வயிற்றில் இருக்கும் அனைத்து விதமான தொந்தரவுகளிலிருந்தும் விடுபட முடியும்.
 
கறிவேப்பிலையை உணவில் எடுத்துக் கொள்வது குரோமோசோம்கள் மற்றும் எலும்பு மஜ்ஜை போன்றவற்றை உடலுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும் இலவச கதிரியக்கத்தினால் பாதிக்கப்படுவதைத் திறம்படத் தடுக்கிறது.
 
பூஞ்சையினால் ஏற்படும் தோல் பிரச்சினைகளில் முகப்பரு, கால்களில் ஏற்படும் ஆணி போன்றவற்றைக் குணப்படுத்துவதில் கறிவேப்பிலை முக்கியப் பங்கினை வகிக்கின்றது. கறிவேப்பிலை நோய்த் தொற்றினைக் தடுப்பதற்குக் காரணம் அதில் உள்ள வைட்டமின் ஈ ஆகும்.