வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

எலுமிச்சை சாற்றை தினமும் குடிப்பதால் உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துமா...?

நாம் உணவாக உட்கொள்ளும் அனைத்து பொருட்களுக்கும் ஒரு வரைமுறை உள்ளது. அதுபோல நாம் விரும்பி குடிக்கும் எலுமிச்சை ஜூஸ் அளவுக்கு அதிகமாக குடித்தால் என்ன நடக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.


உடலில் வைட்டமின் ‘சி’ சத்து அதிகமாக இருந்தால், சில நேரங்களில் குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படும்.  ஏனென்றால் எலுமிச்சை, வைட்டமின் ‘சி’யின் ஆதாரமாக விளங்குகிறது.
 
வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து பருகுவதால் சிறுநீர் பிரிப்பு உண்டாகிறது. இந்த சாறு, சிறுநீர் வெளியேறுவதை அதிகப்படுத்துகிறது. மருந்துகள் பயன்படுத்தும்  நோயாளிகள் எந்த ஒரு சிட்ரஸ் சாறுகளையும் பயன்படுத்த வேண்டாம் என்று மற்றொரு ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது.
 
அப்படி சிட்ரஸ் சாறு உட்கொள்வதால் பல உடல் உபாதைகள் வரலாம் என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. ஆகையால் நீங்கள் மருந்து மாத்திரைகள் எடுத்து கொள்ளவும் பொழுது எலுமிச்சை பயன்படுத்துவத்தை தவிர்ப்பது நல்லது.
 
எலுமிச்சை சாறு அல்லது அமிலத் தன்மைக் கொண்ட வேறு சாறுகள் அதிகம் எடுத்துக் கொள்வதால் பல விதமான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிகப்படியான  அமிலத்தன்மை கொண்ட எலுமிச்சை சாறுகள் மூலமாக அல்சர் உருவாகின்றது.
 
எலுமிச்சை அமிலத்தன்மை வாய்ந்த ஒரு பொருள். அதிகமான எலுமிச்சைபயன்பாட்டால் உங்கள் பற்கள் அழுகலாம். எலுமிச்சை சாறு மென்மையான  குளிர்பானங்கள் போலவே பற்கள் மீது அரிக்கும் விளைவுகளை உண்டாக்குகின்றது.
 
வாய்ப்புண் நம்முடைய வாய்ப் பகுதியின் உள்ளே அல்லது ஈறுகளில் உண்டாகும் புண் ஆகும். இது மிகவும் வலி நிறைந்தது. இந்த சமயங்களில் எலுமிச்சையை  பயன்படுத்துவது, இந்த வலியை இன்னும் அதிக படுத்தும். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் இந்த புண்ணை மேலும் அதிகப்படுத்தி வலியை அதிகரிக்கும். 
 
ஒரு நாளைக்கு 120 மி லி அளவு அல்லது 5.9 கிராம் அளவு எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது. எலுமிச்சை சாறில் தண்ணீர் சேர்த்து மட்டுமே  பருக வேண்டும்.