புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 27 ஜூன் 2022 (12:41 IST)

ஆரோக்கியத்திற்கு தேவையான நன்மைகளை அள்ளித்தரும் சுக்குத்தூள் !!

Dried ginger
இஞ்சியை நன்றாக காயவைத்த பின், அதில் உள்ள நீர் வற்றிய நிலையில் இருப்பது தான் சுக்கு. சுக்கு எளிதில் கெடாது.


ஒரு டம்ளர் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் சுக்குத் தூள் போட்டு நன்றாக கொதிக்கவைத்து, அதை வடிகட்டி, தேன் கலந்து தினமும் பருகி வந்தால் மூட்டுகளில் ஏற்படும் வீக்கம், மூட்டு வலி குணமாகும்.

வயிற்றில் எரிச்சல் ஏற்படும்பொழுது, அதனை சரிசெய்ய, கரும்பு சாறுடன் சிறிதளவு சுக்கு பொடியை சேர்த்து, தினமும் காலையில் எழுந்ததும் குடித்து வந்தால், வயிற்றுப் பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.

சுக்குத் தூளை பயன்படுத்தி டீ போட்டு குடித்தால், இருமல் தொல்லையிலிருந்து விடுபட உடனடி நிவாரணம் கிடைக்கும். மேலும் மூக்கு ஒழுகல் இருந்தால். அப்போது இஞ்சி டீ செய்து, அதில் வெல்லம் சேர்த்து குடிக்கதால் மூக்கு ஒழுகல் நின்றுவிடும்.

உடல் எடையைக் குறைக்க சுக்கு மிகவும் உதவுகிறது. ஒரு டம்ளர் நீரில் அரை டீஸ்பூன் சுக்கு பொடியை கலந்து வெதுவெதுப்பாக சூடுபடுத்தி அதில் தேன் சேர்த்து, அதனை தினமும் குடித்து வந்தால், அதில் உள்ள தெர்மோஜெனிக் ஏஜென்ட், கொழுப்புக்களை கரைத்து, தொப்பையின் அளவை குறைத்து, உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.

சில நேரங்களில் சிறுநீரானது முழுமையாக வெளியே வராமல் தேங்கிவிட்டால் அதில் உள்ள கிருமிகளால் சிறுநீர் தொற்று ஏற்படும். வெதுவெதுப்பான பாலில் சுக்கு பொடியை சேர்த்து, அதில் நாட்டுச் சர்க்கரைக் கலந்து குடித்து வந்தால் சிறுநீரக நோய் தொற்று குணமாகும்.