வியாழன், 9 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

அதிக சத்துக்களை கொண்ட பயன்தரும் டிராகன் பழம்!!

டிராகன் பழம் பலவித நன்மைகளை கொண்ட ஒரு பழம். டிராகன் பழத்தில் 3 வகை உள்ளன. சிவப்பு தோலுடன் கூடிய சிவப்பு சதை கொண்ட  பழம். சிவப்பு தோலுடன் கூடிய வெள்ளை சதை கொண்ட பழம். மஞ்சள் தோலுடன் கூடிய வெள்ளை சதை கொண்ட பழம்.
கிவி பழத்தை போல் இருக்கும் சதையில் கறுப்பு புள்ளிகளால விதைகள் இருக்கும். இந்த விதைகள் செரிமானத்திற்கு நல்லது. ஒயின் மற்றும் சில பானங்கள் தயாரிப்பதில் இந்த பழத்தை பயன்படுத்துவர்
 
இதன் இலைகளை கொண்டு ஆரோக்கியமான டீயை தயாரிக்கலாம். நார்ச்சத்து அதிகமாக டிராகன் பழத்தில் இருக்கின்றது.
 
உடல் எடை குறைப்பு, செரிமான அதிகரிப்பு கொழுப்பு குறைப்பு, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குவது. ஆர்றலி அதிகரிப்பது  போன்றவை இதன் பயன்களாகும்.
இந்த பழங்களில் காணப்படும் கரோட்டின் மற்றும் லைகோபீன் போன்ற பல ஆன்டிஆக்ஸிடன்ட்களை கொண்ட இந்த பழம் பல வகையான  புற்றுநோய்களை எதிர்க்கும் பண்புகளை கொண்டுள்ளன. 
 
குறிப்பாக, அவை புரோஸ்டேட் புற்றுநோய்க்கான வாய்ப்புகளையும் மற்றும் உடலில் உள்ள கட்டிகளின் அளவையும் குறைக்க உதவுகின்றன. 
 
டிராகன் பழங்கள் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால், அடிக்கடி நோய்வாய்ப் பட்டவர்களுக்கு அல்லது புற்றுநோயை உருவாக்கும்  அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல முதல் படியாகும்.