Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இத்தனை மருத்துவ குணங்களை கொண்டுள்ளதா பாகற்காய்?

பாகற்காயில் வைட்டமின் பி3, வைட்டமின் பி5, வைட்டமின் பி6 போன்ற வைட்டமின்களும், இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் மக்னீசியம்  போன்ற தாதுக்கள் இருக்கிரது. அவை நமது உடலுக்கு மிகுந்த பயனளிக்கிறது.
பாகற்காயில் வைட்டமின் சி மிகுதியாக இருப்பதால் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாக உள்ளது.
 
டைப் 2 நீரிழிவு நோயை எதிர்கொள்ள சிறந்த மருந்தாக பாகற்காய் சாறு பயன்படுகிறது. பாகற்காயில் உள்ள ஒருவகை வேதிப்பொருள் இன்சுலின் போல  செயல்பட்டு, இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.
 
பாகற்காய் சூப்பை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தொல்ல் நோய்களை போக்குவதுடன் தோல்களை பளபளப்பாக்கி என்றும் இளமை தோற்றத்தை தரும்.
 
உடலின் வளர்சிதை மாற்றத்தை சரிசெய்யும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் பாகற்காயில் நிறைந்துள்ளன. உடலின் செரிமான மண்டலத்தை நன்றாகத் தூண்டி, நல்ல  செரிமானத்தை உண்டாக்குகிறது. இதனால், உடலுக்குத் தேவையான சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, வேகமாக உடல் எடையை குறைக்கிறது.
 
உடலில் ஏற்படும் கட்டி மற்றும் கண் நோய்களுக்கு சிறந்த மருந்தாக பாகற்காய் விளங்குகிறது. பசுமையான பாகற்காய்கள், ஆஸ்துமா, சளிப் பிடித்தல், இருமல்  போன்றவற்றைத் தீர்ப்பதில் மிகச்சிறந்த நிவாரணியாகப் பயன்படுகின்றன.
 
பாகற்காயை உண்டு வந்தால், சருமத்தில் உள்ள பருக்கள், கருப்பு தழும்புகள், ஆழமான சருமத் தொற்றுகள் ஆகியவை நீங்கும். பாகற்காயை சாறு எடுத்து,  அதனுடன் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து, தினந்தோறும் வெறும் வயிற்றில் 6 மாதம் அருந்தி வந்தால், கண்கூடாகப் பலனைக் காணலாம்.


இதில் மேலும் படிக்கவும் :