1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

வாழைப்பூவில் உள்ள துவர்ப்பு தன்மை சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறதா...?

வாழையின் அனைத்துப் பாகங்களும் நமக்குப் பயன்தரக்கூடியவை. குறிப்பாக, வாழைப்பூ அதிகப் பயன்தரக்கூடியது. அற்புத மருத்துவக் குணங்களைக் கொண்ட வாழைப்பூ. 

வாழைப்பூவில், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, தாமிர சத்து முதலிய சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் வைட்டமின் ஏ, வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்களும் உள்ளன.
 
வாழைப்பூவில் உள்ள துவர்ப்பு தன்மை ரத்தத்தில் கலக்கும் சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது. வாய்ப்புண், வாய் துர்நாற்றம், உள்மூல வெளி மூல புண்கள் போன்ற பிரச்சனைகளுக்கு வாழைப்பூ பயனளிக்கிறது.
 
தவறான உணவு முறை பழக்கம் மற்றும் மன உளைச்சலால் செரிமான கோளாறு, வயிற்றில் புண்கள் போன்ற பிரச்சனைகள் உருவாகிறது. இதனை சரிசெய்ய வாரம் ஒருமுறையாவது வாழைப்பூவை சமைத்து சாப்பிட வேண்டும்.
 
பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறு மற்றும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு வாழைப்பூ நல்ல தீர்வு தரும். வாழைப்பூவை வேகவைத்தோ அல்லது பொரியல் செய்தோ சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.
 
உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து அதில் நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும்.