1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

இதயத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகிறதா காலிஃபிளவர்...?

காலிஃபிளவர் மூளையை போன்ற தோற்றம் உடையது. அதேபோல் இது மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது. வைட்டமின் ஏ, பி, இ, கே சத்துக்கள் அதிகமாக உள்ளன. 


தினமும் 90 கிராம் அளவுக்கு காலிஃபிளவர் சாப்பிடும்போது வைட்டமின் சி சத்து கிடைக்கிறது.
 
மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்றவை இருப்பதால் இதில் எதிர்ப்புச்சக்தி அதிகமாக உள்ளது. புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்ட காலிபிளவர் இதயத்துக்கு பலம் கொடுக்கிறது.
 
செரிமான கோளாறுகளை சரிசெய்யும் தன்மை இதற்கு உண்டு. காலிஃபிளவரை பயன்படுத்தி கீழ்வாதம், முடக்குவாதத்தால் ஏற்படும் வலிக்கான மருந்துகளை  தயாரிக்கலாம்.
 
காலிபிளவர் புற்று நோய் ஏற்படாமல் தடுக்கும் சக்தி உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. காலிஃப்ளவரில் சல்போரபேன் என்ற வேதிப்பொருள் அதிகமாக உள்ளது. இது புற்று நோய்களின் செல்களின் அடிப்படை வளர்ச்சியை அழிக்கிறது.
 
காலிபிளவரில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் இது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும். இதனால் இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகிறது.