வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தினமும் உணவுக்கு பின் சிறிது வெல்லம் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் தெரியுமா...?

தினமும் உணவு உண்ட பின்பு ஒரு சிறிய வெல்லக்கட்டியை உண்பது, செரிமானத்தைச் சீராக்கும். வெல்லத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், உணவுக்குழாய்,  நுரையீரல், வயிறு என உடல் உறுப்புகளை சுத்தமாகவும் உறுதியாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது.

வெல்லம், எலுமிச்சை உள்ளிட்டவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் பானகம் மிகவும் பிரபலம். இதனைக் கோவில்களில் கூட பிரசாதமாக வழங்குவது வழக்கம். இதனை அருந்துவதால், உடல் ஆரோக்கியம் பலப்படும்.
 
உடல் சூட்டை அதிகரிக்க வெல்லத்தண்ணீர் பெரிதும் இன்றியமையாதது. எனவே குளிர்காலங்களில் காலை வேளைகளில், வெதுவெதுப்பான வெல்லத் தண்ணீரை  அருந்துவது நல்ல பலனைத் தரும்.
 
வெல்லத்தை இளவயது பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில், இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், உடலில் ரத்தத்தின் அளவை அதிகரித்து ஞாபக  மறதியைத் தவிர்க்க உதவுகிறது.
 
ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், வெதுவெதுப்பான வெல்லத் தண்ணீரைத் தொடர்ந்து பருகி வந்தால், நோயின் தாக்கம் படிப்படியாகக் குறையும். சளி,  இருமல் போன்றவற்றிற்கும் நிவாரணம் கிடைக்கும். இதனால்தான் சித்தமருத்துவத்தில் வெல்லத்தை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள்.
 
வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை சமனில் வைத்துக்கொள்ள வெல்லத்தை தினமும் சாப்பிடுவது நல்லது. இதனால், உடலுக்கு இரும்புச்சத்தும், கால்சியமும்  கிடைக்கிறது.
 
சர்க்கரையும், வெல்லமும் கரும்பில் இருந்து எடுக்கப்படுகின்றன. இருப்பினும் சர்க்கரையில் இருப்பது வெற்றுக் கலோரி. வெல்லம் பல்வேறு கனிமங்களையும்,  வைட்டமின்களையும் கொண்டிருப்பதால், உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
 
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், காலை வேளையில் வெதுவெதுப்பான தண்ணீரில் வெல்லத்தைக் கரைத்து வெல்லம் தண்ணீரைக் குடித்துவர நல்ல பலன் கிடைக்கும்.