திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 30 மார்ச் 2022 (11:33 IST)

சுடுநீரை தொடர்ந்து குடிப்பதால் என்ன நன்மைகள் தெரியுமா...?

சுடுநீரைத் தொடர்ந்து குடித்து வந்தால், இரத்த ஓட்டம் சீராகும். மேலும், நரம்பு மண்டலத்தின் ஓரத்தில் தேங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களும் கரைந்து விடும்.


சுடுநீரைக் குடித்தால் நச்சுக்கள் அகலும். சுடுநீர் குடித்தவுடன் நம் உடல் வெப்பநிலை உயர்கிறது. அது உடனடியாக வியர்வையாக உடம்பை விட்டு வெளியேறுகிறது. இதனால் உடம்பில் உள்ள நச்சுத் தன்மைகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு உடல் சுத்தமாகிறது.

சுடுநீருடன் சிறிது எலுமிச்சைச் சாற்றை சேர்த்துக் கொண்டால் இன்னும் அதிக பலன் கிடைக்கும். அடிக்கடி சுடுநீர் குடிப்பதால் முடி நன்றாக வளர்வதுடன் முடிகளின் வேர்களும் சுறுசுறுப்பாகி மேலும், முடிகள் வளர வழி வகுக்கும்.

இரத்த ஓட்டத்தைப் போலவே, குடல் இயக்கமும் சரியாக இருந்தால்தான் நாம் ஆரோக்கியத்துடன் இருக்க முடியும். மிதமான சுடுநீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் குடல் இயக்கம் அதிகரிக்கும்.

தினமும் காலையில் மிதமான சுடுநீரைக் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். கொழுப்புக்கள் சரசரவென்று குறைந்து எடையும் குறையும். ஒரு சொட்டு எலுமிச்சை சாற்றையும் சுடுநீருடன் சேர்த்துக் கொண்டால் அது உடம்பில் மேலும் கொழுப்பு சேர விடாமல் தடுக்கும்.

மாதவிடாய் ஏற்படும் நாட்களில் பெண்கள், சூடான நீரை அடிக்கடி குடித்து வந்தால், மாதவிடாயினால் ஏற்படும் வலி வெகுவாகக் குறையும்.