1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Caston
Last Updated : திங்கள், 21 செப்டம்பர் 2015 (13:48 IST)

பேரிச்சம்பழம் ஒரு வரப்பிரசாதம்

பழங்களிலேயே வித்தியாசமான சுவை கொண்டது பேரிச்சம்பழம். சிறந்த சத்துள்ள பேரிச்சம் பழங்கள் ஆப்ரிக்க, அரேபிய நாடுகளில் அதிகமாக விளைகிறது. இந்த பேரிச்சம்பழம் மனிதனின் பல்வேறு உடல் சுகவீனங்களை சரி செய்கின்றன.

தினமும் இரவில் 4 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டுவிட்டு பின் ஒரு டம்ளர் பால் குடித்து வந்தால் போதும் இரத்தம் விருத்தி அடைவதோடு, உடலில் தெம்பும், வலிமையும் கூடும். மூட்டு வலி, கர்ப்ப கால பிரச்சனை, குடல் பிரச்சனை, பார்வை பிரச்சனை உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு இது வரப்பிரசாதமே.

மூட்டு வலி

30 வயது தாண்டிவிட்டாலே இன்றைய காலத்தில் பலருக்கும் மூட்டு வலி தொடர்பான பல பிரச்சனைகள் வர ஆரம்பிக்கின்றன. இந்த பிரச்சனை வருவதற்கு முக்கிய காரணம் உடலில் உள்ள கால்சியம் குறைபாடே. இதை சரி செய்ய தினமும் கொஞ்சம் பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால், தேவையான கால்சியம் சத்தை பெறுவதோடு, மூட்டு வலி மற்றும் அது தொடர்பான பிரச்சனைகளை சரி ஆக்கிவிடலாம்.

கர்ப்பம்

இரத்த சோகை உள்ள பெரும்பாலான பெண்களுக்கு குழ‌ந்தை‌ப் பேறு காலக‌ட்ட‌த்‌தி‌ல் பா‌தி‌ப்பு ஏ‌ற்படு‌கிறது. இதனை‌த் த‌வி‌ர்‌க்க பே‌ரி‌ச்ச‌ம் பழ‌த்தை உ‌ட்கொ‌ள்ளு‌ங்க‌ள் இர‌த்த சோகையை‌ப் போ‌க்‌கி‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். பேரிச்சம்பழத்தில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் செலினீயம் போன்றவை அதிகமாக உள்ளன. இவை கருவின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள். மேலும் இதில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது. ஆகவே கர்ப்பமாக இருக்கும் போது, இதனை அதிகம் சாப்பிட்டால், உடலில் உள்ள இரத்தத்தின் அளவானது குறையாமல் பாதுகாத்து கொள்ளும்.

குடல் பிரச்சனை

வைட்டமின் பி5, வைட்டமின் பி3, கால்சியம், பாஸ்பரஸ், கொழுப்பு, நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் காப்பர் போன்ற சத்துக்கள் பேரிச்சம்பழத்தில் உள்ளன, இதை தினமும் சாப்பிட்டு வந்தால் குடலில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் சரியாகிவிடும்.   

பார்வை கோளாறு

வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் பேரிச்சம் பழத்தில் அதிகம் நிறைந்துள்ளன. கண் பார்வைக்கு தேவையான வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால், மாலைக்கண் நோய் ஏற்படாமல் தடுக்கும்.