1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 21 டிசம்பர் 2021 (15:42 IST)

கண்களின் பார்வை திறனை மேம்படுத்த உதவும் கறிவேப்பிலை !!

கறிவேப்பிலையில் 'வைட்டமின் ஏ' சத்து நிரம்பியுள்ளது. இந்த 'வைட்டமின் ஏ' நமது கண்களின் பார்வைத் திறனை மேம்படுத்த மிகவும் உதவுகிறது.

வலிமையான மற்றும் கருமையான முடியைப் பெறுவதற்கு கறிவேப்பிலை பயன்படுகிறது. மேலும் தலை முடியில் உள்ள பொடுகு உள்ளிட்ட பல பிரச்சனைகளை நீக்கவும் கறிவேப்பிலை பயன்படுகிறது.
 
தோல்களில் ஏற்படும் அலர்ஜிகள், நோய்கள் போன்றவற்றை குணப்படுத்த கறிவேப்பிலை பயன்படுகிறது. இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டவர்கள் கருவேப்பிலையை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. ஏனெனில் கறிவேப்பிலையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது.
 
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ள கறிவேப்பிலை பயன்படுகிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் சர்கரையை காட்டுக்குள் வைத்திருக்க கறிவேப்பிலை மிகச்சிறந்த ஓர் இயற்கை மருந்தாகும்.
 
உடலில் வெளிக்காயங்கள் அல்லது புண்கள் ஏற்படும்போது, அந்த காயங்களின் மேலே கருவேப்பிலையை வைப்பது அக்காயங்களினால் தொற்று ஏற்படுவதை தடுக்கும்.
 
ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க கருவேப்பிலை உதவுகிறது. கறிவேப்பிலையில் உள்ள ஃபோலிக் அமிலம் நமது உடலில் உள்ள எலும்புகளை வலுப்படுத்த மிகவும் உதவுகிறது.