1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : வியாழன், 7 ஜூலை 2022 (16:29 IST)

எண்ணற்ற மருத்துவ பலன்களை தரும் சீரகத்தண்ணீர் !!

Cumin Water
உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்கள் பலரும் பல செயல்முறைகளை பின்பற்றி இருப்பார்கள். அதற்கு சீராகத்தை தண்ணீருடன் சேர்த்து குடிக்க வேண்டும். இது உடல் எடை குறைய உதவுவதாக சொல்லப்படுகிறது.


மேலும் பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத்தில் உடல் பருமனை குறைக்க சீரகத் தண்ணீர் பரிந்துரைக்கப் படுகிறது. ஏனெனில் சீரகத்தில் உடலை சுத்தப்படுத்தும் மற்றும் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.

சீரகத் தண்ணீர் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க செய்வதன் மூலம், உடலில் உள்ள அதிகப் படியான கலோரிகள் மற்றும் கொழுப்புக்களை கரைத்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

சிலருக்கு அளவுக்கு அதிகமாக பசிக்கும் அத்தகையவர்கள் பசியை குறைப்பதற்கு கண்ட கண்ட மாத்திரைகளை வாங்கி போடுவார்கள். ஆனால் சீரகத் தண்ணீரில் இயற்கையாகவே பசியை அடக்கும் பண்பு உள்ளது. இதன் மூலம் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் அதிகப்படியான கலோரிகளை உட்கொள்வதை குறைக்கலாம்.

சீரகத் தண்ணீர் குடித்து வருவது இரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது. நீர் மாசுபாடு, கண்ட உணவுப் பொருட்கள், காற்று மாசுபாடு, காஸ்மெடிக் பொருட்கள் போன்ற தற்போதைய காலத்தின் நடைமுறைகளால் நச்சானது உடலில் பல வழிகளில் நுழைகிறது.