திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 14 மே 2022 (14:14 IST)

சருமம் மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் சிறந்த தேங்காய் எண்ணெய் !!

நம் பாரம்பரியத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது தேங்காய் எண்ணெய். முடிக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் அவை நீளமாக, வலுவாக மற்றும் மிருதுவாக ஆகிறது.


தலைமுடிக்கு சிறந்த கண்டிஷனராக செயல்படுகிறது. முடி உதிர்தல், பொடுகு உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு வறண்ட மற்றும் உலர்ந்த முடி ஒரு பொதுவான காரணம். தேங்காய் எண்ணெய் இதற்கு ஒரு சிறந்த தீர்வாகும்.

தேங்காய் எண்ணெய்யில் உள்ள லாரிக் அமிலம் மோனோலாரின்-ஆக மாறுகிறது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.

நம் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. சரும வறட்சி மற்றும் மந்தத்தை குறைகிறது. வெர்ஜின் தேங்காய் எண்ணெய்யை சருமத்தில் பயன்படுத்துவது நீர் இழப்பை தடுத்து நாள் முழுவதும் ஹைட்ரேட்டாக வைத்திருக்க உதவுகிறது.

தேங்காய் எண்ணெய்யை கொண்டு முகத்தில் மசாஜ் செய்வது பளபளப்பான சருமத்தை பெற உதவும்.

தேங்காய் எண்ணெய் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. கோல்ட்-ப்ரஸ்டு தேங்காய் எண்ணெய்யை சமையலுக்கு பயன்படுத்தலாம். மற்ற சமையல் எண்ணெய்களுடன் ஒப்பிடும்போது, தேங்காய் எண்ணெய் ஜீரணிக்க எளிதானது மற்றும் நம் செரிமான அமைப்புக்கு ஆரோக்கியமானது.