திங்கள், 4 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

சளி போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சித்தரத்தை !!

சித்த ஆயுர்வேத வைத்தியர்கள் இதை கபம், வாதம், வீக்கம், இழுப்பு, இருமல், காய்ச்சல் போன்றவைகளுக்குப் பயன்படுத்துவார்கள் என்றாலும் நெஞ்சிலுள்ள கபத்தை வெளியேற்றுவதில் திறன் மிக்கது. 

சித்தரத்தை கோழை, கபத்தை அகற்றும். உடல் வெப்பத்தை அகற்றும். பசியை தூண்டும்.மணம் தருவதும், செரிமான ஊக்கியாகவும் செயல்படுவதுமான சித்திரத்தை  பன்னெடுங் காலமாகத் தென்னாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற ஒரு மூலிகையாகும். 
 
நுரையீரல் நுண்குழாய்களை விரிவடையச் செய்து மூச்சு எளிதாக வரச் செய்வதுடன் இக்குழாய்களிலும், மூச்சுக்குழல் மற்றும் தொண்டையிலும் உள்ள சளியை  வெளியேற்றுகிறது.
 
சித்தரத்தை ஒரு சிறந்த மணமூட்டியாக இருப்பதால் இதை வாயிலிட்டுச் சுவைக்க வாய் நாற்றம் வராது. இதன் நறுமணம் காரணமாக இதைப் பலவகை ஆயுர்வேத மருந்துகளில் சேர்த்து உள்ளனர்.
 
சித்தரத்தை பொடியை நீரில் போட்டு நன்கு கலக்கி இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் அரிசி கஞ்சியுடன் அந்நீரை சேர்த்து பருகி வந்தால் வயிறு மற்றும்  குடல்களில் இருக்கும் அல்சர் புண்கள் குணமாகும்.
 
சித்தரத்தையை சிறிதளவு எடுத்து வாய்க்குள் போட்டு அதக்கி கொள்வதால் அதிகளவு உமிழ்நீர் சுரக்கும். இந்த உமிழ்நீர் சிறிது சிறிதாக தொண்டைக்குள் இறங்கி  தொண்டையில் சளித்தொல்லையால் ஏற்படும் குரல் கரகாரப்பை நீக்கும். சளியால் ஏற்படும் தொண்டைகட்டையும் சீக்கிரத்தில் குணமாகும்.