திங்கள், 25 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

ஜீரண கோளாறுகளை முழுமையாக குணப்படுத்த உதவும் ஏலக்காய் நீர் !!

ஏலக்காயில் ஏரளமான மருத்துவ பலன்களுடன் எண்ணற்ற தாதுக்கள், பல வகையான வைட்டமின்களும் நிறைந்துள்ளன. 

ஏலக்காயில் உள்ள அதிக அளவு ஆண்டி ஆக்சிடண்ட்ஸ், இரத்த அழுத்தத்தை குறைத்து இதய கோளாறுகள் ஏற்படாமல் காக்கும். குறிப்பாக இதயத்தின் செயல்பாட்டை சீராக வைத்து, எந்த வித பிரச்சனைகளும் ஏற்படாமல் காக்கும். 
 
தினமும் குடிக்கும் நீரில் ஏலக்காயை போட்டுக் கொள்ளவேண்டும். இதனையே தாகம் எடுக்கும் போதும் குடித்து வரவேண்டும். இந்த ஏலக்காய் நீரை உணவு சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் குடிக்க வேண்டும். 
 
ஏலக்காய் நீரானது உடலின் மெட்டபாலிசத்தை நன்றாக நடைபெற செய்யும், உடலுக்குள் செல்லும் நீர்ச்சத்துடன் இந்த ஏலக்காயின் தன்மையும் சேர்ந்தே செல்லும். எனவே சோர்வாக இருக்கும் செல்களை இது உற்சாகப்படுத்தி சுறுசுறுப்பாக்கும். 
 
தொடர்ந்து 14 நாட்கள் இந்த நீரை குடித்து வந்தால், சுமார் ஒரு கிலோ முதல் 2 கிலோ எடை குறையும். அத்துடன் உடல் வலிமையும் அதிகரிக்கும். உடல் பருமனால் உடலில் ஏற்பட்டுள்ள சோர்வு, அலுப்பு போன்றவை முற்றிலுமாக நீங்கி விடும். 
 
இந்த ஏலக்காய் நீரை குடித்து வருவதன் மூலம் சர்க்கரை நோயை தடுக்கலாம். இதில் உள்ள மெக்னீஸ் உடலில் சர்க்கரையின் அளவை அதிகரிக்காமல்  பார்த்துக்கொள்ளும்.
 
செரிமான கோளாறுகளால் அவதிபடுபவர்களுக்கு இந்த ஏலக்காய் நீர் அருமருந்தாகும். இது ஜீரண கோளாறுகளை முழுமையாக குணப்படுத்திவிடும். மேலும்,  மலட்டுத்தன்மையையும் குணப்படுத்தும்.