1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

கெட்ட கொழுப்பை உடலில் சேராமல் காக்குமா கடலை எண்ணெய்...?

சமையலில் பரவலாகப் பயன்படுத்தப்படும் கடலை எண்ணெய் பல்வேறு அத்தியாவசிய சத்துக்களைத் தன்னகத்தே அடக்கி உள்ளது. கடலை எண்ணெய் அதிக ஆற்றல் தரக்கூடியது.

கடலை எண்ணெய் அதிக ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் கடலை எண்ணெயில் உடலுக்கு 884 கலோரிகள் ஆற்றல் கிடைக்கிறது. அதிக அளவில் லிப்பிடுகள்  நிறைந்தது. பூரிதமான கொழுப்புகள் உடலில் சேரவும், கெட்ட கொழுப்பான கொலஸ்டிரால் உடலில் சேராமல் காக்கவும் இவை உதவும்.
 
ஒமேகா 6 எனப்படும் கொழுப்பு அமிலம் நிறைந்த சமையல் எண்ணெய், கடலை எண்ணெய். கடலை எண்ணெயில் 'வைட்டமின்-இ' மிகுந்துள்ளது. 
 
100 கிராம் எண்ணெய்யில் 15.69 மில்லி கிராம் ஆல்பா டோகோபெரல், 15.91 மில்லிகிராம் காமா டோகோபெரல் உள்ளது. வைட்டமின் இ, லிப்பிடுகளில் கரையும் நோய் எதிர்ப்பு பொருளாகும். செல் சவ்வுகள் வளர்ச்சி அடையவும், ஆக்சிஜன்பிரீ-ரேடிக்கல்களிடம் இருந்து பாதுகாப்பு அளிப்பதிலும் இது பங்கெடுக்கிறது.  பயன்பாடுகள்:
 
450 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலையில்தான் கடலை எண்ணெய் கொதிக்கும் என்பதால் பண்டங்கள் சமைக்க ஏற்றது கடலை எண்ணெய். வறுத்தெடுக்கும் உணவுகள் செய்ய கடலை எண்ணெய் சிறந்தது.
 
நீண்டகாலம் கெட்டுப் போகாத தன்மை கொண்டது என்பதால் பல நாட்களுக்கு வைத்திருந்து பயன்படுத்தலாம். ஆனால் சிலருக்கு வாந்தி போன்ற ஒவ்வாமையை  ஏற்படுத்தும் என்பதால் மருத்துவரின் ஆலோசனைக்குப் பின் பயன்படுத்தலாம்.