திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

பாகற்காய் எந்த நோய்களுக்கெல்லாம் மருந்தாக உள்ளது தெரியுமா...!

பாகற்காய் உணவுப் பையிலுள்ள பூச்சியைக் கொல்லும். பசியைத் தூண்டும். பித்தத்தைத் தணிக்கும். பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவும்.
பாகற்காயை உணவில் சேர்த்து கொண்டால் இருமல், இரைப்பு, மூலம், வயிற்றுப் புழுவை நீங்கும்.
 
பாகற்காய் இலையின் சாறு ஓர் அவின்சில் சிறிது எடுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம்  நின்றுவிடும்.
 
பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால் செரிமான அமிலம் சுரப்பது மேம்படும். எனவே பசியும் அதிகரிக்கும். கணைய புற்றுநோய் அணுக்களை அழிப்பதில் முக்கிய  பங்கு வகிக்கிறது.
 
நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் நல்ல மருந்தாகும். பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும்.  இவ்வாறு செய்து வந்தால் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.
 
பாகற்காயில் பீட்டா-கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ உள்ளதால் கண் சம்மந்தமான நோய்களுக்கு தீர்வாக உள்ளது.