செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (17:50 IST)

உணவில் ஓட்ஸை சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் பயன்கள் !!

oats Face Scrub
ஓட்ஸை தொடர்ந்து சாப்பிட்டால், உடல் பருமன் குறையும் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் மற்றும் இதய நோய்கள் குறையும்.


ஓட்ஸ் இயல்பாகவே சருமத்திற்கு நிறைய நன்மைகள் தருகிறது. ஆன்டி ஆக்ஸிடென்ட் தன்மை பெற்றது. இது சருமத்தின் துளைகளை இறுக்கமடைய செய்யும் மேலும் பளபளப்பாக வைக்க உதவும்.

தயிர் சருமத்திற்கு மிக நல்லது. இதில் ஜின்க் அமிலம் இருப்பதால் சருமத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்து பொலிவுற செய்யும் தன்மை கொண்டது.

ஓட்ஸ், அதிமதுர தூள் 2 ஸ்பூன்,  வேகவைத்த ஓட்ஸ் அல்லது ஓட்ஸ் தூள் 1 ஸ்பூன், தயிர் அல்லது ரோஸ் வாட்டர் 1 ஸ்பூன். ஓட்ஸை வேகவைத்து எடுத்து கொள்ளுங்கள். பிறகு அதில் அதிமதுர தூள் மற்றும் தயிர் கலந்து பேஸ்ட்டாக்குங்கள். இதை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவுங்கள். பின்னர், இது வறண்ட உடன் கீழிருந்து மேலாக தண்ணீர் வைத்து கழுவுங்கள்.

ஓட்ஸில் கொழுப்பு மற்றும் உப்பு குறைந்த அளவிலே உள்ளது. இயற்கையாகவே இதில் இரும்புசத்தும், சுண்ணாம்புச் சத்தும் அதிகம் உள்ளதால், இதயம், எலும்பு மற்றும் நகங்களுக்கு நல்லது.

ஓட்ஸில் உள்ள கரையக்கூடிய நார்பொருள் (பீடா குளுகான்) ரத்தத்தில் உள்ள எல்.டி.எல் கொலஸ்டிரால் எனப்படும் உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்பை குறைக்க உதவுகிறது. அதிக கரையக்கூடிய நார்பொருள், வயிறு மற்றும் குடல் செயல்களை ஒழுங்கு செய்து மலச்சிக்கலை தீர்க்கிறது.

உணவில் அதிக அளவு ஓட்ஸை சேர்த்துக் கொள்வதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு நிலையாக இருக்கும், நரம்பு சம்மந்தமான கோளாறுகள் ஏற்படாது. பாலில் வேகவைத்து கஞ்சியாக பயன்படுத்துவது, சிறந்த காலை உணவாக கருதப்படுகிறது.