1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

கைக்குத்தல் அரிசியை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்...!!

கைக்குத்தல் அரிசியில் செலினியம் இருப்பதால். பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறைக்கப்படுகிறது. இந்த  அரிசியில் அதிக அளவு நார்ச்சத்து இருக்கிறது.
கைக்குத்தல் அரிசியில் உள்ள சத்துக்கள் மார்பக புர்றுநோய் மற்றும் இதய நோய்க்கு எதிராக தற்காத்துக் கொள்ள உதவுகிறது.
 
இரத்தக் குழலில் பிளேக் உருவாகும் அபாயத்தையும் குறைக்கும். இதனால் இதய நோய் வருவதை குரைக்க முடியும் என்றும்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
கைக்குத்தல் அரிசியின் தவிட்டில் கிடைக்கும் எண்ணெய், உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் என்று அறியப்படுகிறது. இந்த அரிசியில் எல்டிஎல் (LDL) கொழுப்பை குறைக்க உதவும் நார்ச்சத்து உள்ளது.
 
கைக்குத்தல் அரிசி, ஆரோக்கியமான நரம்பு மண்டலத்திற்கு தேவையான மாங்கனீசு நிறைந்தது. இதிலுள்ள ஊட்டச்சத்துகள் கொழுப்பு அமிலங்களை உருவாக்கி, பாலியல் ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது.
 
கைக்குத்தல் அரிசியில் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிக்க தேவையான மெக்னீசியம் அதிக அளவில் உள்ளது.