ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 10 டிசம்பர் 2021 (10:01 IST)

வாழைப்பூவை அடிக்கடி செய்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !!

வாழைப்பூவில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புசத்து, புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் பி, சி ஆகியவை உள்ளன.

வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள கொழுப்புத் தன்மை குறைந்து ரத்த ஓட்டம் சீராகும். இதனால் ரத்தச்சோகை நோய் வராது.
 
அதிக கார உணவுகளை அடிக்கடி உண்பவர்களுக்கும் ஏற்படும் வாரத்திற்கு ஒருமுறை வலைப்பூவை பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் உணவை சாப்பிட்டு வந்தால் இந்த அல்சர் புண்கள் கூடிய விரைவில் குணமாகும். வயிற்றில் இருக்கும் ஜீரண அமிலங்களின் செயல்பாடுகளையும் சீரமைக்கும்.
 
தவறான உணவு முறை பழக்கம் மற்றும் மன உளைச்சலால் செரிமான கோளாறு, வயிற்றில் புண்கள் போன்ற பிரச்சனைகள் உருவாகிறது. இதனை சரிசெய்ய வாரம் ஒருமுறையாவது வாழைப்பூவை சமைத்து சாப்பிட வேண்டும்.
 
வாய்ப்புண், வாய் துர்நாற்றம், உள்மூல வெளி மூல புண்கள் போன்ற பிரச்சனைகளுக்கு வாழைப்பூ பயனளிக்கிறது. பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறு மற்றும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு வாழைப்பூ நல்ல தீர்வு தரும்.
 
உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து அதில் நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும். வாழைப்பூவை வேக வைத்தோ அல்லது பொரியல் செய்தோ சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.
 
ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்று வர அடிக்கடி வாழைப்பூவை பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கலாம்.