வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

வெந்நீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!

காலையில் ஒரு கப் சுடுநீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடித்து வந்து பாருங்கள் அதுவும் ஒரு மாதம்  இச்செயலை தொடர்ந்து பின்பற்றி வந்தால், நிச்சயம் உங்கள் உடலில் பல மாற்றங்களைக் காண முடியும். அதிலும் இதில் எலுமிச்சை என்னும் சக்தி வாய்ந்த பழம் இருப்பதால், உடலில் பல்வேறு செயல்பாடுகள் சீராவதோடு, உடல் நன்கு  ஆரோக்கியமாக இருப்பதை நன்கு உணரலாம்.

 
சுடுநீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிப்பதன் மூலம், கல்லீரல் மற்றும் உடலின் இதர பாகங்களில்  தேங்கியிருந்த டாக்ஸின்கள் முற்றிலும் வெளியேறிவிடும்
 
காலையில் சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடிப்பதன் மூலம், செரிமான பாதைகளில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, செரிமான அமிலத்தின் உற்பத்தியும் சீராக இருக்கும். கல்லீரலில் உள்ள நொதிகளின் ஆற்றலை அதிகரித்து, கல்லீரலை வலிமையோடு வைத்துக் கொள்ளும். மேலும் குடலியக்கத்தை அதிகரித்து, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு  ஏற்படுவதைத் தடுக்கும்.
 
எலுமிச்சையில் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது உடல் எடையைக் குறைக்க உதவும். மேலும் பெக்டின் குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதுமட்டுமின்றி, சுடுநரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால், அது  கலோரிகளின் அளவைக் குறைத்து, உடல் எடையைக் குறைக்க உதவும்.
 
நீங்கள் அடிக்கடி வயிற்றுப் பிரச்சனைகளால் அவஸ்தைப்படுபவரானால், சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடிப்பதன் மூலம், அது வயிற்றில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கும்.
 
சுடுநீரில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடிப்பதன் மூலம், அது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை  அதிகரித்து, நோய்களின் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும். மேலும் இதனை தொடர்ந்து ஒரு மாத காலம் பின்பற்றி  வந்தால், அடிக்கடி சளி பிடிப்பதில் இருந்து விடுபடலாம்.
 
காலையில் எழுந்ததும் இயற்கை பானமான சுடுநீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிப்பதன் மூலம், உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, சருமத்தின் ஆரோக்கியமும் மேம்படும்.
 
காலையில் உடற்பயிற்சி செய்து, அப்போது வெளிவரும் வியர்வையின் மூலம் சோடியம் உடலில் இருந்து வெளியேறும்.  அப்படி வெளியேறும் சோடியத்தை பூர்த்தி செய்யும்.