புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : திங்கள், 11 ஏப்ரல் 2022 (13:30 IST)

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் !!

Empty stomach - Water
நீர் பல எண்ணிலடங்காத பயன்களையும், பல ஆரோக்கிய நலன்களையும் கொண்டுள்ளது. அவற்றில் ஒன்றான அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்ப்போம்.


வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் அதிகாலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளில் முக்கியமானது குடல் சுத்தமாவது ஆகும்.  

குடலானது சுத்தமாக இல்லை என்றால் முகத்தில் பருக்கள் தோன்ற ஆரம்பிக்கும். எனவே தினமும் வெறும் வயிற்றில் தண்ணீரைக் குடித்து வந்தால், குடலியக்கம் சீராக நடைபெற்று, முகம் பருக்களின்றி பொலிவோடு இருக்கும்.

தண்ணீர் குடித்தவுடன், சிறிது நேரத்திலேயே மலம் கழிக்க தூண்டும். அவ்வாறு தினமும் தவறாமல் மலம் கழித்தாலேயே, உடலில் உள்ள கழிவுகளானது முழுவதுமாக வெளியேறிவிடும்.

தண்ணீர் உடலின் இரத்த ஓட்டத்தில் கலந்து மூலைமுடுக்குகளில் தங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடும். எனவே தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடலானது நச்சுக்களின்றி சுத்தமாக இருக்க உதவி செய்யும்.

தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலின் நீர்ச்சத்து அதிகரித்து, தலைவலி குறையும் மற்றும் அல்சர் பிரச்சனையும் சரியாகும்.