புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

8 வடிவ நடைப்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள் !!

மனித உடல் அவரவர் கை அளவுக்கு எண்ஜான் அளவுமட்டும் இருக்கும். உள்ளங்கால் முதல் உச்சி வரை இந்த எண்ணிக்கை ஏற்றத்தில் இருக்கும், உடல் நோயும் ஆரம்ப நிலை கீழிருந்து மேல் முகமாகவே அதிகப்படியாகும். 

நோய் இருப்போரும் நோய் இல்லாதோரும் இந்த 8 வடிவ நடை பயிற்சி செய்யலாம், உங்கள் வீட்டிற்குள் உள்ளோ அல்லது மாடியிலோ இடம் தேர்வு செய்து 6 க்கு  12 அடி அல்லது 8-க்கு 16 அடி அளவில் கோடு இட்டு அந்த செவ்வக இடத்திற்குள் 8 வடிவில் வரைந்து கொள்ளலாம்.
 
இது தெற்கு வடக்காக இருக்கவேண்டும். காலை அல்லது மாலை, வடக்கு நோக்கி நின்று அந்த 8 வடிவ கோட்டின் மேல் உங்கள் நடை பயிற்சியை ஆரம்பிக்கலாம்,  ஆண்கள் வலது கை பக்கம், பெண்கள் இடது கை பக்கம் ஆரம்பிக்க வேண்டும். 
 
ஆரம்பித்த இடத்திற்கே வந்த பின் அதே வழியில் தொடர்ந்து 21 நிமிடம் நடக்க வேண்டும். பின்பு மறுமுனையில் தெற்கு நோக்கி நின்று இதேபோல் 21 நிமிடம்  கையை நன்கு விசிறி மிதமான வேகத்தில் நடை பயிற்சி செய்யவேண்டும். மொத்தம் 42 நிமிடங்கள் செய்யவேண்டும்.
 
பலன்கள்:
 
சர்க்கரைநோயால் வரும் உள்ளங்கால் எரிச்சல், குதிவாதம், வடகலை நாடி, இடகலை நாடி புத்துயிர் பெரும். மூட்டு வலி பிரச்சனை குறையும்.
 
தொடை பகுதி பலம் பெரும். ஆண்மை குறைபாடு, விதைப்பை குறைபாடு சர்க்கரை நோய் அளவு, விந்து நாத அணு குறைபாடு, கல்லீரல் மண்ணீரல் குறைபாடு, கர்ப்பபை குறைபாடு ஆகியவை நீங்கும்.
 
வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் குறையும். இரத்த அழுத்தம், இதய நோய், ஆஷ்துமா, காசம், நீர் உடம்பு, உடல் அதிக எடை குறைய ஆரம்பிக்கும். 
 
தொண்டை பகுதி பிரச்சனைகள், அடிக்கடி கழுத்து பிடிப்பு, முதுகில் வாய் பிடிப்பு வராது.