புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

அன்றாட உணவில் மிளகை சேர்ப்பதால் உண்டாகும் பயன்கள் !!

சுவாச பிரச்சனை உள்ளவர்கள் பொதுவாகவே காலங்களில் அனைத்து உணவுகளிலும் சிறிது மிளகு சேர்த்துக்கொள்வது நல்ல பலனை கொடுக்கும்.
 

சாதாரணமான சளி, இருமலுக்கு பாலில் மிளகுத்தூள் மற்றும் மஞ்சள் தூள் சிறிது சேர்த்து பருகினால் சரியாகிவிடும். இது எந்த விதமான பக்கவிளைவுகளும்  ஏற்படுத்தாது.
 
தினமும் உணவில் சிறிது மிளகை சேர்த்து உண்பதனால் மலச்சிக்கல் தீரும் மற்றும் வயிற்றில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கிறது.
 
மிளகை உணவில் தினந்தோறும் பயன்படுத்துவதால் செரிமானத்தை தூண்டுகிறது. மிளகு வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை உற்பத்தி செய்கிறது. இந்த  ஹைட்ரோகுளோரிக் அமிலம் குடலை சுத்தம் செய்கிறது. இரைப்பை நோய்களை தடுக்கிறது.
 
தோலில் ஏற்படுகின்ற வெண்னமயான வெள்ளை திட்டுகளை மிளகு சரி செய்கிறது. சருமத்தின் அசல் நிறத்தினை பாதுகாப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.
 
உணவில் சேர்க்கப்படும் மசாலா பொருட்களில் மிகமுக்கியமான மிளகை சேர்ப்பதன் மூலம்  உடல் எடை குறைய உதவுகிறது. மிளகு அனைத்துவகையிலும்  உடலுக்கு நன்மை உண்டாக்கும் என்றாலும் அளவோடு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் வயிற்றில் எரிச்சலை உண்டாக்கலாம்.