புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

தொப்பையை விரைவில் குறைக்கும் உணவுகள் எவை தெரியுமா...?

உணவில் பச்சை காய்கறிகளை அதிகம் உட்கொள்ளுங்கள். அதிலும் ப்ராக்கோலி, பாகற்காய் மற்றும் முட்டைக்கோஸ் ஆகியவற்றை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், உடல் எடை விரைவில் குறைவதோடு, தொப்பையும் குறையும். 
நீர்ச்சத்துள்ள பழங்களான பேரிக்காய் மற்றும் தர்பூசணியை பசி ஏற்படும் போது சாப்பிட்டால், உடலில் கொழுப்புக்கள் சேராமல் இருப்பதோடு,  தொப்பையும் குறையும். 
 
நார்ச்சத்துள்ள உணவுகளை டயட்டில் சேர்த்து வந்தால், தொப்பை கரையும். அதிலும் ஓட்ஸ், ரொட்டி, ப்ரௌன் பிரட் போன்றவற்றை உணவில்  சேர்த்துக் கொள்ள வேண்டும். 
 
இரண்டே வாரங்களில் தொப்பை குறைவதற்கு, பொட்டாசியம் உள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி,  பொட்டாசியம் உடலில் குறைவாக இருந்தால் தான், தொப்பை போட ஆரம்பிக்குமாம். 
 
உடல் எடையை இரண்டே வாரங்களில் குறைக்க வேண்டுமானால், கொழுப்புள்ள உணவுகளை அறவே தொடக்கூடாது. குறிப்பாக ஜங்க்  உணவுகளான சிப்ஸ், பர்க்கர், பிரெஞ்சு ப்ரைஸ் போன்றவற்றை மறக்க வேண்டும். 
 
தொப்பை குறைய வேண்டுமானால், உணவில் சேர்க்கும் உப்பின் அளவைக் குறைக்க வேண்டும். ஏனெனில் அதிகப்படியான உப்பு உடல்  ஆரோக்கியத்திற்கு கெடுதலை விளைவிப்பதோடு, தொப்பையை குறைக்க தடையாக இருக்கும். எனவே உணவில் உப்பை அளவை  குறைக்கவும். தொப்பையையும் உணவாலேயே குறைக்கலாம். 
 
பொதுவாக பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளில் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் இருக்கும். இவற்றை சாப்பிட்டால், பசியே  ஏற்படாது. அதிலும கருப்பு பீன்ஸில் அளவுக்கு அதிகமான அளவில் ஃப்ளேவோனாய்டுகள் உள்ளன. இந்த உணவை அதிகம் சாப்பிட்டால்,  வயிற்றில் சேரும் கொழுப்புகள் குறையும் என்று ஆய்வுகள் பலவும் கூறுகின்றன. ஆகவே மறக்காமல் இந்த கறுப்பு பீன்ஸை உணவில்  சேர்த்துக் கொள்ளுங்கள்.
 
பேரிக்காயில் குறைவான அளவில் கலோரி இருப்பதோடு, நார்ச்சத்து அதிகமாக உள்ளது. ஆகவே இந்த பழத்தை தினமும் உணவு  சாப்பிடுவதற்கு முன் சாப்பிட்டு, பின்னர் உணவை சாப்பிட்டால், உடல் எடை நிச்சயம் குறையும். ஏனெனில் ஆய்வு ஒன்றில், இந்த பழத்தில்  நார்ச்சத்துக்கள் மட்டுமின்றி, கேட்டிசின்ஸ் மற்றும் ஃப்ளேவோனாய்டு என்னும் இரண்டு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை உணவில் இருக்கும் கொழுப்புகள் வயிற்றில் தங்காமல் பார்த்துக் கொள்ளும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 
 
அனைவருக்கும் பிடித்த காய்கறிகளில் ஒன்றான உருளைக்கிழங்கை சாப்பிட்டால், உடல் எடை குறையும் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் இதனை சாப்பிட்டால், உடல் எடை குறைவதோடு, கொழுப்புகள் சேராமல் இருக்கும்.