ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 25 ஜூன் 2022 (12:12 IST)

எண்ணற்ற நன்மைகளை கொண்ட வாழைப்பூ !!

Banana flower
வாழைப்பூ பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளில் இருந்து நம்மை காப்பாற்றும். வாழை மரத்தின் அனைத்து பகுதிகளும் பயன்படக்கூடியது.


சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாழைப்பூவை தங்கள் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும், வாழைப்பூவை சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம் சிறிது மிளகு மற்றும் பூண்டு சேர்த்து வாழைப்பூ பொரியல் செய்து சாப்பிடலாம்.

இரத்த மூலநோய் உள்ளவர்கள் வாழைப்பூவை வாரம் இருமுறை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் விரைவாக குணமாகும்.

வாழைப்பூ ரத்தத்தை சுத்திகரிக்கும் பண்புகள் கொண்டது, இவை ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைப்பத்தோடு உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கும். வாழைப்பூவை வாரத்தில் இரண்டு நாட்கள் சாப்பிட்டு வரலாம்.

வாழைப்பூவின் பண்புகள் இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும். வாழைப்பூவை தொடர்ந்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

வாழைப்பூ கர்பப்பபை பிரச்சனைகளை குறைக்க உதவும். வெள்ளைபடுதல் போன்ற பிரச்சனை உள்ள பெண்கள் வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

வாழைப்பூவில் உள்ள நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும், ரத்த சோகையும் நீங்கும்.