1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் அவரைக்காய் !!

பொதுவாக நம் உணவில் தினமும் காய்களை அதிகம் சேர்த்துக் கொண்டால் நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.


அவரைக்காயில் கொழுப்பு சத்து குறைவாகவும் புரத சத்து அதிகமாக உள்ள அரிய மருத்துவ நன்மைகள் கொண்ட காயாகும்.
 
அவரைக்காயில் நார்ச்சத்து, விட்டமின் ஏ, விட்டமின் சி, ரிபோ பிளேவின், நியாசின், சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம், செலினியம், சோடியம், கொழுப்பு அமிலங்களான ஒமேகா 3, ஒமேகா 6 இப்படி பெரிய சத்துக்கள் பட்டாளமே உள்ளது.
 
சுவாசப் பிரச்சனையால் அவதிப்படுகிறவர்கள், கண்டிப்பாக வாரம் இரண்டு முறையாவது அவரைக்காயை உணவில் சேர்த்து வருவது நல்லது. மேலும் தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது கபம் வாதம் பித்தம் சம்பந்தமான நோய்கள் அறவே நீங்கும்,
 
அவரையில் இரும்புசத்து அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று இதன் பிஞ்சில் துவர்ப்புச் சுவை அதிகமுள்ள இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. உண்மையில் இரத்தம் சுத்தமாக இருந்தாலே தோல் நோய்கள் உள்ளிட்ட பல நோய்கள் வராமல் தடுக்கலாம்.
 
அவரைக்காய் இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் என்பதால் இரத்த அழுத்தம் இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.