புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உடலுக்கு ஆரோக்கியத்தை தர கூடிய அனைத்து விட்டமின்களையும் கொண்ட அவரைக்காய்...!!

அவரைக்காய் அதிக அளவில் புரதச்சத்துகளைக் கொண்டதாகவும் உள்ளது, இதனால் தலைமுடி உதிர்தல் போன்ற பிரச்சினைகளுக்கும் இது சிறந்த தீர்வாக உள்ளது. மேலும் அவரைக் காயில் நல்ல கொழுப்பு, கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் போன்றவைகள் உள்ளன.

அவரைக்காய் உயர் இரத்த அழுத்தம், உயர் சர்க்கரை போன்ற பிரச்சினைகளுக்கு மிகச் சிறந்த தீர்வாக இருந்து வருகின்றது, மேலும் அவரைக்காயினை குழம்பாக  வைத்து சாப்பிடுவதைவிட பொரியலாக சாப்ப்பிடுவடு மிகச் சிறந்த செரிமான சக்தியினைக் கூட்டுவதாக உள்ளது.
 
அவரைக்காய் பித்தத்தினைக் குறைக்கும் தன்மை கொண்டுள்ளது,  நீரிழிவு நோய் உள்ளவர்கள் வாரத்தில் 2 முறை அவரைக்காய் எடுத்துக் கொள்வது நல்லது. ஆனால் அவரைக் காயில் வாயு உள்ளதால் குழந்தைகளுக்கு குறைந்த அளவில் கொடுத்தல் நல்லது. மேலும் இது சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும்  இது சரி செய்கிறது.
 
ரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபினை உற்பத்தி செய்ய கூடிய அவரைக்காய், உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. ரத்த ஓட்டம் சிறப்பாக அமைய தேவையான அனைத்து சத்துக்களும் அடங்கி உள்ளன. இதயத்திற்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுத்து, சர்க்கரையின் அளவை கட்டு படுத்தும்.
 
உடலுக்கு ஆரோக்கியத்தை தர கூடிய அனைத்து விட்டமின்கள் கொழுப்பு சத்துக்கள் அடங்கி உள்ள அவரைக்காயை உணவில் எடுத்து கொள்ள பசியை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.
 
அவரைக்காய் நுரையீரலுக்கு செல்லும் ரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்து உடலுக்கு தேவையான இரும்பு சத்தை கொடுக்கிறது. நோய்  எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வியாதிகளிடம் இருந்து நம்மை பாத்து காத்து கொள்கிறது.