வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

சதாரணமாக கிராமங்களில் கிடைக்கக்கூடிய துத்தி கீரையின் மருத்துவ குணங்கள்!

துத்தி இலையை நன்றாக அரைத்துக் கசக்கிசாறு எடுத்துக்கொண்டு அந்தச்சாற்றுடன்தேங்காய் எண்ணெய் சேர்த்து நீர் சுண்டும்அளவு நன்றாக க்காச்சி வடிகட்டிப் பாட்டிலில்வைத்துக் கரப்பான் கண்ட குழந்தைகளுக்குதடவி வந்தால் இந்நோய்  குணமாகும்.

 
குடற்புண்ணால் வேதனைபடுகின்றவர்கள்துத்தி கஷாயத்தை தினசரி மூன்று வேளைசர்கரை கலந்து குடித்து வந்தால் பூரண  குணம்பெறலாம். தவிர நீர்சுளுக்கு, தொண்டை கம்மல்சொரிசிரங்கு உள்ளவர்கள்இந்தக் கஷாயத்தைக்குடித்து குணமடையலாம்.
 
மூல நோயை ஆர‌ம்ப‌த்‌திலேயே க‌ண்ட‌றி‌ந்து அத‌ற்கான மரு‌த்துவ‌ம் எடு‌த்து‌க் கொ‌ள்வது ந‌ல்லது. இத‌ற்கு கை வை‌த்‌திய  மு‌றை‌யி‌ல் ந‌ல்ல மரு‌ந்துக‌ள் உ‌ண்டு.
 
துத்தியிலையை நிழலில் உலர்த்தி காயவைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு தேக்கரண்டி பொடியை வெந்நீரிலோ அல்லது 1 டம்ளர் பாலிலோ 2 வேளை சாப்பிட்டு வர மூல நோய் கட்டுப்படும்.
 
துத்தி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி இளம் சூட்டில் கட்டி வர, இரத்த மூலம், சீழ் மூலம் குணமாகும். துத்தியிலையில் வெங்காயம், சிறு பயிறு சேர்த்து சமைத்து உண்ண மலச்சிக்கல் நீங்கும். மூலச் சூடு தணியும்.
 
கட்டுக்கொடி இலையை பாக்களவு மென்று தின்ன இரத்தபேதி, சீதபேதி, மூலக்கடுப்பு, எரிச்சல் குணமாகும். துத்தி இலையை  காரமின்றி பொரியலாகச் செய்து உணவுடன் உண்டு வர 120 நாள்களில் மூல நோய் முற்றிலும் குணமாகும். (புளி, காரம், புகை,  புலால் நீக்க வேண்டும்).