வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

இயற்கையில் கிடைக்கக்கூடிய துளசியின் மருத்துவப் பயன்கள்.....

மனச்சோர்வு நீங்க, தினமும் காலையில் 15 துளசி இலைகளை பருப்புடன் சேர்த்து மூன்று மாதம் அருந்த மனச்சோர்வு நீங்கி  உடல், உள்ளம் பலம் அடையும்.

* துளசி, சுக்கு, பனை வெல்லம், பால் சேர்த்துத் தயாரிக்கப்படும் டீயை அருந்த சோர்வு நீங்கும். சுறுசுறுப்பாகும்.
 
* துளசி வேரைப் பொடித்து நெய்யோடு கலந்து அருந்த ஆண்மை அதிகரிக்கும்.
 
* தேள் கடிக்கு துளசிச் சாறுடன் வேப்ப இலைச்சாறு, மிளகு சேர்த்து அருந்தி, கடிவாயில் பூச நஞ்சு முறிவு ஏற்படும்.
 
* துளசிச் சாறு, இஞ்சிச் சாறு சம அளவு எடுத்து அதனுடன் மிளகுத்தூள் ஒரு சிட்டிகை சேர்த்து தேனில் குழைத்துச்  சாப்பிட்டால் மூக்கடைப்பு, தும்மல், நெஞ்சு சளி பிரச்னைகள் அகலும்.
 
* அலர்ஜியினால் வரும் ஒவ்வாமையை நீக்குகிறது.
 
* நுரையீரலைப் பலப்படுத்துகிறது.
 
* துளசி இலை சுவாசப் பாதையில் உள்ள தொற்றுநோய்க் கிருமிகளை செயலிழக்கச் செய்கிறது.
 
* ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது.
 
* வயிற்று வலியைப் போக்குகிறது.
 
* உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
 
* ஆஸ்த்துமாவிற்கு தீர்வாக உள்ளது.
 
* சுரத்தைப் போக்கும் சஞ்சீவி.
 
* பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோயைப் போக்கும்.
 
* கொசுக்களை ஒழிக்க துளசி புகைச் சிறந்தது.
 
* துளசி இலையை நீர் சேர்த்துக் காய்ச்சி ஆவி பிடிக்கச் சுரம் நீங்கும்.
 
* மனச்சோர்வு நீங்க, தினமும் காலையில் 15 துளசி இலைகளை பருப்புடன் சேர்த்து மூன்று மாதம் அருந்த மனச்சோர்வு நீங்கி  உடல், உள்ளம் பலம் அடையும்.