சமையலுக்கு பயன்படும் பிரியாணி இலையில் இத்தனை மருத்துவ குணங்களா...?
முடி உதிர்தல் என்பது இந்த தலைமுறையினர் அதிகமாக எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்று. பொதுவாகவே பிரியாணியில் வாசனைக்காக பயன்படுத்தப்படும் ரம்பை இலை பற்றி நம் அனைவருக்குமே தெரியும்.
பிரியாணி இலை டைப்-2 நீரிழிவிற்கு நல்லது. இது இரத்த சர்க்கரை அளவை சீராகப் பராதரித்து, இதயத்தின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ள உதவும். எனவே நீரிழிவு நோயாளிகள் இதனை உணவில் சேர்த்து வருவது நல்லது.
தொடர்ந்து இந்த பிரியாணி இலையை சாப்பிட்டு வந்தால் முடி கொட்டுவதும் நிற்கும், பிரியாணி இலையை நன்கு வேகவைத்து அதன் தண்ணீர் நன்கு ஆறியதும் தலையை கழுவினால் முடி உதிர்வது நிற்கும்.
பிரியாணி இலையில் இருக்கும் ஆண்டி பாக்டீரியாக்கள் கிருமி தாக்கத்தில் இருந்தும் நம்மைக் காக்கும். இதேபோல் தலையில் பொடுகு, அரிப்பு தொல்லை இருந்தால் பிரியாணி இலையை கொதிக்கவைத்த தண்ணீருடன் எலுமிச்சை சாறு சேர்த்து, தலையில் தேய்த்து வந்தால் இப்பிரச்னை தீரும்.
சிறுநீரக பிரச்சனைகள் மற்றும் சிறுநீரக கற்களைப் போக்க பிரியாணி இலை பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு பிரியாணி இலையை நீரில் போட்டு காய்ச்சி, அதனைக் தினமும் ஒரு டம்ளர் குடித்து வர வேண்டும்.