இந்த கீரையில் இப்படி ஒரு நன்மைகளா...?
முள் முருங்கை, முருக்க மரம், கல்யாண முருக்கன், முள்முருக்கு என்று பல பெயர்களிலும் கல்யாண முருங்கை மரங்கள் அழைக்கப்படுகின்றன. இது மனிதனுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒரு மூலிகையாக உள்ளது.
இதன் இலை, விதை, பூ, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டது. சூப்பர் மார்க்கெட்டுகளில் தற்போது இந்த இலைகள் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இனி கல்யாண முருங்கை இலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கல்யாண முருங்கை காய்ச்சலை குறைக்கும், மேலும் உடலை வலுவாக்கும். மேலும் கல்யாண முருங்கை இலையுடன் மிளகு சேர்த்து சூப் செய்து சாப்பிட்டால் குளிர் காலங்களில் ஏற்படும் சளித்தொல்லை ஏற்படாது.
சில தாய்மார்களுக்கு குழந்தைக்கு தேவையான அளவு பால் இருக்காது. அப்படிப்பட்டவர்கள் அதிக பாலை சுரக்க செய்ய இந்த கீரையை சாப்பிடலாம்.
கல்யாண முருங்கை இலையுடன் கருஞ்சீரகம் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்து பத்து நிமிடங்கள் கழித்து குளித்தால் உடலில் ஏற்படும் தோல் நோய்களான சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.
சிறுநீரகப் கோளாறுகளை சரி செய்ய கல்யாண முருங்கை கீரையை அதிகம் சாப்பிடலாம். மேலும் இது சூடு மற்றும் பித்தநோய்களை கட்டுப்படுத்தும்.
கல்யாண முருங்கை இலையுடன் மாதுளம்பழச் சாறு , கசகசா, உளுந்து, சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் ஆண்மை பெருகும். மேலும் தாம்பத்யத்தில் ஈடுபாடு இல்லாதவர்களுக்கு உறவில் ஆர்வம்ஏற்படும்.
கல்யாண முருங்கை இலைகளை இலேசாக வதக்கி, இளஞ்சூட்டில் வலியுள்ள இடத்தில் வைத்துக் கட்டினால் கீல்வாயு குணமாகும். மேலும் அரையாப்புக் கட்டி, வீக்கம் கரையும்.