1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பலவித நோய்களுக்கும் அற்புத மருந்தாகும் சோற்றுக்கற்றாழை !!

சோற்றுக் கற்றாழையை அப்படியே சாப்பிடவும் செய்யலாம் அல்லது உடல் உறுப்புக்களில் தேய்த்துக்கொள்ளலாம். சோற்றுக் கற்றாழையை உண்பதால் ஆண்கள் மற்றும் பெண்களின் சிறுநீர் தாரையில் உள்ள புண் எரிச்சல், குணமாகும்.

சோற்றுக் கற்றாழை சாற்றை தினமும் இரண்டு அவுன்ஸ் குடிப்பதால் ரத்த நாளங்களில் ஏற்படும் கொழுப்பு அடைப்பு வராமல் இருக்கும். தினமும் குடித்து வந்தால் உடல் எடை வேகமாக குறைய தொடங்கும், உஷ்ணம் கல்  அடைப்புகள் சரியாகும். தமிழில் இதற்கு கற்றாழை, கத்தாளை, குமரி, கன்னி என வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. 
 
சோற்றுக் கற்றாழையின் தோலை நன்றாக சீவி உள்ளே இருக்கும் சோற்றை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள், அதனுடன் ஒரு சொம்பு ஒரு கலந்து சிறிதளவு எலுமிச்சை பழம் பிழிந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். இதனை தினமும் குடித்து வந்தால் உடல் சூட்டினால் ஏற்படும் பருக்கள் தோலின் கருமை போன்றவை குணமாகும்.
 
ஆயுர்வேத மருத்துவத்தில் கற்றாழைச்சாறு சளி, குடல்புண் ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகின்றன. தோலில் ஏற்படும் தீக்காயம், வெட்டுக்காயம் ஆகியவற்றிற்கும் மருந்தாகப் பயன்படுகிறது.
 
நீர்க்கடுப்பு, வயிற்றின் எரிச்சல் உள்ள சமயங்களில் கற்றாழைச் சோற்றுடன் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் அவை குணமாகும். சிலருக்கு தூங்கி எழுந்ததும் பாதத்தின் அடியில் நெருப்பை மிதித்ததுபோல, எரிச்சலாக இருக்கும். இதைப்போக்க இரவு படுக்கும்முன் கற்றாழையின் நுங்குபோன்ற சோற்றை பாதத்தின் அடியில் தடவிக் கொண்டு படுக்கலாம். பாத எரிச்சல் குறைவதோடு, பாத வெடிப்புகளும் குணமாகும்.
 
இதன் சாறு சருமத்தின் ஈரப்பதத்தை சமன் செய்வதுடன்இ சரும நோய்களையும் குணப்படுத்துகிறது. முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.