1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Veeramani
Last Updated : வெள்ளி, 11 ஏப்ரல் 2014 (18:26 IST)

மனைவி பெயரை குறிப்பிடாத மோடிக்கு தேசிய மகளிர் ஆணையம் கேள்வி

மோடியின் திருமணம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. அதன் உறுப்பினர் நிர்மலா சமந்த் கூறும்போது, "இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது" என்று கூறியுள்ளார்.
Nirmala Samant
பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியின் மனைவி தனது சொத்துரிமை பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் இழந்துள்ளார். ஆனால் மோடி பெண்கள் உரிமைகளுக்காக பிரச்சாரம் செய்து வருகிறார்.
 
தனது வேட்பு மனுவில் அவர் தனது சொத்து விவரங்கள், குடும்ப உறுப்பினர்கள் பற்றிய தகவல்களை தெரிவித்துள்ளார். ஆனால் முதல் முறையாக தனது மனைவியின் பெயரை குறிப்பிட வேண்டிய தேவை என்ன?
 
இதற்கு முந்தைய தேர்தல்களில் மனைவியின் பெயரை குறிப்பிடும்படி அவரிடம் தேர்தல் ஆணையம் கட்டாயப்படுத்த வில்லையா? இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து என்று நிர்மலா சமந்த் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் டிவிட்டர் இணைய தளத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், நரேந்திர மோடி தனது திருமணத்தை ஒத்து கொண்டிருக்கிறார். ஒரு இளம்பெண்ணை பின் தொடர்ந்தவர். மனைவியின் உரிமைகளை பறித்தவர். கட்டிய மனைவியை கைவிட்ட இவரா நாட்டின் பெண்களை காப்பாற்றுவார். எனவே அவருக்கு எதிராக வாக்களியுங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
Digvijay Singh & Narendra Modi
காங்கிரஸ் கட்சியின் ராஜ்சபை எம்.பி சாந்தாராம் நாயக் கூறும் போது, "கடந்த சட்டசபை தேர்தலின்போது தனது வேட்பு மனுவில் மோடி ஏன் பெய்யான தகவல்களை அளித்தார் அதில் தனது மனைவி குறித்து தெரிவிக்காதது ஏன்?" என கூறியுள்ளார்.