வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Geetha priya
Last Modified: செவ்வாய், 8 ஜூலை 2014 (11:06 IST)

மதுக்கடைகளில் வெங்காயம், உருளைக் கிழங்கு விற்க திட்டம்

டெல்லி அரசு விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாக மதுக்கடைகள் உட்பட பல இடங்களில் வெங்காயம், உருளைக் கிழங்கு விற்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
டெல்லி மாநில தொழில் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் தெரிவித்துள்ள யோசனையில், விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாக மதுக்கடைகள் உட்பட பல இடங்களில் வெங்காயம், உருளைக் கிழங்கு விற்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. 
 
இதன்படி, டெல்லியில் உள்ள அரசு வளாகங்களில் 250 இடங்களில் மலிவு விலையில் காய்கறிகள் விற்கபடும் எனவும், இது தவிர 70 வேன்கள் மூலம் பல்வேறு இடங்களில் இந்த விற்பனை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
288 நியாய விலைக் கடைகள், ஆயத்துறை 15 இடங்களிலும், பொதுப்பணி துறை 25 இடங்களிலும், அடுத்த மூன்று மாதங்களுக்கு 'லாபம் இல்லை, நஷ்டம் இல்லை' என்ற அடிப்படையில் விற்பனை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிகிறது.
 
மேலும், பொதுமக்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.