1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 25 ஏப்ரல் 2015 (05:31 IST)

ஜெர்சிப் பசுக்களை கொல்ல அனுமதியுங்கள் - முஸ்லீம்கள் கோரிக்கை

பசுவதை தடைச் சட்டத்தை மஹாராஷ்டிர மாநில அரசு விரிவுபடுத்தியுள்ள நிலையில் பசு மாடுகளுக்கு பதிலாக வெளிநாட்டைப் பூர்விகமாகக் கொண்ட ஜெர்சிப் பசுக்களை இறைச்சிக்காக கொல்ல அனுமதிக்க வேண்டும் என்று முஸ்லீம் அமைப்பொன்று கோரிக்கை விடுத்துளளது.
 


மஹராஷ்டிராவில் பல தசாப்தங்களாக அமலில் இருந்த பசுவதைச் சட்டத்தை கடுமையாக்கும் சட்ட முன்வரைவுக்கு சில மாதங்களுக்கு முன் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார்.
 
புதிய சட்டத்தின்படி காளைகளுக்கும், கன்றுகளுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. பசு இறைச்சியை வைத்திருப்போருக்கு சிறை தண்டனை வழங்கவும் சட்டத்தில் இடமிருக்கிறது.
 
பசுவை புனிதமாகக் கருதும் இந்துத்துவ அமைப்புகளும், புலாலை முற்றாக மறுக்கும் சமணர்களும் பசுவதைச் சட்டத்துக்கு ஆதரவான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்.
 
அதே நேரம் இந்த சட்டத்தால் இறைச்சி மற்றும் தோல் வியாபாரத்தில் அதிகம் ஈடுபட்டிருக்கும் முஸ்லீம்கள் தங்களின் பொருளாதார நிலை கடுமையாக பாதிக்கப்படும் என்று அஞ்சுகின்றனர்.
 
நாட்டுப் பசுக்கள் மக்களால் மதிக்கப்படும் நிலையில், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பசுவினங்களை இறைச்சிக்காக வெட்ட அனுமதி அளிக்க வேண்டும் என்று ஒரு முஸ்லீம் அமைப்பு கோரியுள்ளது. இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்படும் ஜெர்சி மாடுகள், சேனல் தீவான ஜெர்சியைப் பூர்விகமாகக் கொண்டவை. இருந்தும் இதுபோன்று வெளிநாட்டு மாடுகளுக்கு விலக்களிக்கும் திட்டமில்லை என்று அரசு கூறியுள்ளது.
 
மத்திய அமைச்சரும், பிராணிகள் நல ஆர்வலருமான மேனகா காந்தியோ, எருமை மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுவதையும் தடை செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார்.
 
இந்துக்களில் பெரும்பாலானோர் மாட்டிறைச்சியைத் தவிற்தாலும், பாலுக்காக இந்தியாவில் ஏராளமான மாடுகள் வளர்க்கப்படுகின்றன. கறவை நின்றுபோன மாடுகள் இறைச்சிக்காக கொல்லப்படுகின்றன.
 
மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்யும் முன்னணி நாடுகள் வரிசையில் இந்தியா தொடர்ந்து இருக்கிறது.