வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 23 ஜனவரி 2024 (12:24 IST)

நேற்று அசைவ உணவு டெலிவரியை முடக்கிய ஜொமேட்டோ.. அரசு உத்தரவால் என விளக்கம்..!

zomato
நேற்று ராமர் கோவில் திறப்பு விழாவின் போது அசைவ உணவுகளை ஜொமேட்டோ நிறுவனம்  டெலிவரி செல்லவில்லை என குற்றச்சாட்டு எழுந்து உள்ள நிலையில் அந்நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் அரசின் உத்தரவு காரணமாகவே அசைவ உணவுகளை டெலிவரி செல்லவில்லை என்று கூறியுள்ளது. 
 
ராமர் கோவில் திறப்பு விழாவை ஒட்டி உத்தர பிரதேசம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் அசைவ உணவு சாப்பிட கூடாது என அரசே உத்தரவு பிறப்பித்து இருந்தது. 
 
இந்த உத்தரவின் அடிப்படையில் நேற்று ஜொமேட்டோ நிறுவனம் அசைவ உணவு டெலிவரியை முடக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து வாடிக்கையாளர்கள் பதிவு செய்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ள ஜொமேட்டோ நிறுவனம்  அரசின் உத்தரவு காரணமாகவே வட மாநிலங்களை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு அசைவ உணவு டெலிவரி செய்ய விடவில்லை என விளக்கம் அளித்துள்ளது.
 
Edited by Siva