1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 4 பிப்ரவரி 2016 (23:58 IST)

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு

ஸ்மிருதி இராணிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 
 

 
ஐதராபாத் மாணவர் தற்கொலை விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு அச்சறுத்தல் இருப்பதாக உளவுத்துறை தெரிவித்ததை அடுத்து அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 
 
ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா கடந்த மாதம் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது.
 
மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலைக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தூண்டுதலே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. மேலும், மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ஸ்மிருதி இராணியை நீக்க வேண்டும் என்று ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர்களும், பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
இந்த நிலையில், ஸ்மிருதி இராணிக்கு பெரும் அச்சுறுத்தல் உள்ளதாக மத்திய உளவுத்துறை கூறியதை அடுத்து, அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.