1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (14:37 IST)

காதலியை பலாத்காரம் செய்த இளைஞர் : அதை வீடியோ எடுத்த தாய்...பகீர் சம்பவம்!

சத்தீஸ்கர் மாநிலம் பலோடா பஜார் என்ற பகுதியில் வசித்து வந்தவர் இளைஞர்(19).இந்த இளைஞர் ஒரு இளம் பெண்ணைக் காதலிப்பது போன்று நடித்துள்ளார். சமீபத்தில் அப்பெண்ணை தன் வீட்டுக்கு அழைத்துள்ளார். அந்தப் பெண்ணும் காதலன் மீது நம்பிக்கை வைத்து  அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இவர்களின் காதல் குறித்து, இளைஞரின் தாய்க்கு முன்னமே தெரியும் என்பதால், இளம்பெண்ணுக்கு சாப்பிட சில உணவுப் பொருட்களைக் கொடுத்துள்ளனர். அதில் ஏற்கனவே மயங்க மருத்து வைத்திருந்ததால் அதைச் சாப்பிட்ட பெண் மயக்கம் அடைந்தார்.
 
அதனையடுத்து அப்பெண்ணை இளைஞர் பலாத்காரம் செய்துள்ளார். அந்த இளைஞரின் தாய் அதை வீடியோ  எடுத்துள்ளார். பின்னர் இளைஞரின் சகோதரி, அவரது கணவன் ஆகியோர் சேர்ந்து அப்பெண்ணுக்கு இந்த வீடியோவை  காட்டி, இதை வெளியிட்டு விடுவோமென மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.
 
அதனால் பயந்து போன இளம் பெண், தன் தந்தை நிலத்தை விற்று வைத்திருந்த சில லட்சங்களை அவர்களிடம் கொடுத்துள்ளார். பிறகு, மீண்டும் பணம் கேட்டு இளம்பெண்ணை மிரட்டல் விடுக்கவே, அப்பெண் தனது தந்தையிடம் இதுகுறித்து கூறியுள்ளார்.
 
அதைக்கேட்டு அதிர்ச்சி  அடைந்த இளம்பெண்ணின் தந்தை மகளை பலாத்காரம் செய்த இளைஞர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீஸார் புகார் கொடுத்துள்ளார்.
 
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் இந்தக் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.