வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 27 நவம்பர் 2015 (18:33 IST)

முன்னாள் பிரதமர் வாஜ்பாயியின் சகோதரி மரணம்

முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் இளைய சகோதரி உடல்நல குறைவால் நேற்றிரவு மரணமடைந்தார்.
 
பாஜக மூத்த தலைவர்களுல் ஒருவரும், முன்னாள் இந்திய பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் இளைய சகோதரி கமலா தீட்ஜித் [87] நீண்டகால உடல்நல குறைவால் நேற்று வியாழக்கிழமை [26-11-15] இரவு மரணமடைந்துள்ளார்.
 
அவருக்கு, இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அவருடைய இறுதிச் சடங்கு இன்று மாலை முடிவடைந்தது. அவருக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.